தென் ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் ட்ராப்பி அணி, சாம்பியன்ஸ் ட்ராப்பி, கிரிக்கெட்

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடருக்கான அணியை வெளியிட்டது தென்னாபிரிக்கா அணி. இந்த அணியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகாராஜ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கெல் இடம்பிடித்து அதிர்ச்சி அளித்தனர். வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் மற்றும் டப்றைஸ் ஷாம்சி அணியில் இடம் பெறவில்லை.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியம் பலம் வாய்ந்த அணியை தேர்ந்தெடுத்துள்ளது. சாம்பியன்ஸ் ட்ராப்பி காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்திடம் மோதுகிறது. அந்த மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடர் மே 24-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த அணிக்கு ஏபி டி வில்லியர்ஸ் கேப்டனாக செயல்படுவார்.

இந்த அணி அணைத்து தரப்பிலும் திறமை வாய்ந்தது என தென்னாபிரிக்காவின் தேர்வாளர்கள் கூறி இருந்தார்கள். இந்த அணி சாம்பியன்ஸ் ட்ராப்பி முன்பாக இங்கிலாந்திடம் மோதுகிறது.

முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த ஏபி டி வில்லியர்ஸும் காயத்தில் இருந்து வெளியேறிவிட்டார். டி வில்லியர்ஸ் மட்டும் இல்லாமல், ஹசிம் ஆம்லா, பேப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் டேவிட் மில்லர் அவருடன் இணைந்து பேட்டிங்கை வலுப்படுத்துகிறார்கள்.

டெஸ்ட் போட்டிகளில் கலக்கி வந்த ஷாம்சி, ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். அவருடன் இணைந்து வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் அணியில் இடம் பிடித்தார். மோர்னே மோர்கல் தென்னாப்ரிக்காவுக்காக விளையாடி 10 மாதங்கள் ஆகிறது. காகிஸோ ரபாடா, மோர்னே மோர்கலுடன் இணைந்து பந்துவீச்சை வலுப்படுத்துவார். சுழற்பந்து வீச்சாளராக இம்ரான் தாஹிர் களமிறங்குவார் என எதிர்பார்க்க படுகிறது.

சாம்பியன்ஸ் ட்ராப்பிக்கான தென்னாபிரிக்கா அணி – ஹசிம் ஆம்லா, க்விண்டன் டி காக், பேப் டு பிளெஸ்ஸிஸ், ஏபி டி வில்லியர்ஸ், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னல், அண்டிலே பெலுக்வாயோ, காகிஸோ ரபாடா, இம்ரான் தாஹிர், கேஷவ் மகாராஜ், வெய்ன் ப்ரிடோரிஸ், பரான் பெஹர்டின், மோர்னே மோர்கல்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published.