புதிய கேப்டன்... இளம் வீரர்கள் பலருக்கு அணியில் இடம்; இந்திய அணியுடனான தொடருக்கான  அணியை அறிவித்தது தென் ஆப்ரிக்கா !! 1
புதிய கேப்டன்… இளம் வீரர்கள் பலருக்கு அணியில் இடம்; இந்திய அணியுடனான தொடருக்கான  அணியை அறிவித்தது தென் ஆப்ரிக்கா

தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் டிசம்பர் 10ம் தேதி துவங்க உள்ளது. தென் ஆப்ரிக்கா அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி, கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தென் ஆப்ரிக்கா அணியும் தனது அணியை அறிவித்துள்ளது.

புதிய கேப்டன்... இளம் வீரர்கள் பலருக்கு அணியில் இடம்; இந்திய அணியுடனான தொடருக்கான  அணியை அறிவித்தது தென் ஆப்ரிக்கா !! 2

டி.20 மற்றும் ஒருநாள் தொடருக்கான தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனாக மார்கரம் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக டெம்பா பவுமாவே செயல்பட உள்ளார்.

இந்திய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடருக்கான தென் ஆப்ரிக்கா அணியில் அதிகமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டி.20 தொடருக்கான தென் ஆப்ரிக்கா அணி; 

மார்கரம், பார்ட்மன், மேத்யூ நண்ட்ரீ பர்கர், கெரால்ட் காட்சி (முதல் இரண்டு டி.20 போட்டிகளுக்கு மட்டும்), ஃபெரேரா, ரீசா ஹென்ரிக்ஸ், மார்கோ ஜென்சன், ஹென்ரிச் கிளாசன், கேசவ் மஹராஜ், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, பெலேகிலயோ, தப்ரைஸ் சம்சி, ஸ்டப்ஸ், லிசார்ட் வில்லியம்ஸ்.

ஒருநாள் தொடருக்கான தென் ஆப்ரிக்கா அணி; 

மார்கரம் (கேப்டன்), பார்ட்மன், பர்கர், டோனி டி ஜார்ஜி, ரீசா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசன், கேசவ் மஹராஜ், மிஹ்லாலி, டேவிட் மில்லர், வியன் மல்டர், பெல்லாகிலோயா, தப்ரைஸ் சம்சி, ராசி வாண்டர் டூசன், கெய்ல், லிசர்ட் வில்லியம்ஸ்.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி; 

டெம்பா பவுமா, டேவிட், பர்கர், கெரால்ட் காட்சி, டோனி, டீன் எல்கர், மார்கோ ஜென்சன், கேசவ் மஹராஜ், மார்கரம், வியான் மல்டர், லுங்கி நிகிடி, கீகன் பீட்டர்சன், காகிசோ ரபாடா, திரிஸ்டன் ஸ்டப்ஸ், கெய்ல் வெர்ரேன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *