இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
287 ரன்கள் டார்க்கெட்டை விரட்டிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவிலேயே 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 135 ரன்களில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளை தென்னாப்பிரிக்கா வென்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

டேல் ஸ்டெய்னுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டு தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே நிகிடி முதல் இன்னிங்ஸில் 1, இரண்டாவது இன்னிங்ஸில் 6 என மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தென் ஆப்ரிக்க ஆடுகளத்துக்கு ஏற்ப, இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக தென் ஆப்ரிக்க வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில்,

“இந்திய அணி பவுலர்கள் உண்மையிலேயே என்னை கவர்ந்து விட்டனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாட்டை பார்த்து நான் ஆச்சர்யம் அடைந்தேன். உண்மையில் இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பேட்டிங்கில் எதிர்பார்த்தது போல கோலியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. விராட் கோலியை நான் தனிப்பட்ட முறையில் பாரட்டினேன்” என்றார்.
* இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்பாடு:
முதல் இன்னிங்ஸ்:
விராட் கோலி – 153
மற்ற பத்து வீரர்களின் மொத்த ஸ்கோர் – 142
இரண்டாம் இன்னிங்ஸ்:
விராட் கோலி – 5
மற்ற பத்து வீரர்களின் மொத்த ஸ்கோர் – 141
இலக்கை எட்ட மீதமுள்ள 136 ரன்களை எடுக்க முடியாமல், இந்திய அணி தோற்றது. அதை கோலி எடுக்காமல் போக, முடிவு தோல்வி.
அன்று சச்சின்…. இன்று கோலி….
ஆனால், ஒரே வித்தியாசம் அன்று சச்சின், இரண்டு வடிவ கிரிக்கெட்டுக்கும் கட்டாயம் தேவைப்பட்டார். இன்று கோலி, டெஸ்ட் போட்டிகளுக்கு கட்டாயம் தேவைப்படுகிறார்.