இனி உங்கள நம்பி பிரயோஜனமே இல்ல; திடீரென ஓய்வை அறிவித்தார் டூபிளசிஸ் !! 1

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவரான டூபிளசிஸ், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டு பிளெசிஸ், தென் ஆப்பிரிக்க அணிக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4163 ரன்கள் (சராசரி 40.02) அடித்துள்ளார்.

சமகால தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் வளர்சிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர்களில் ஒருவரான டூபிளசிஸ், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 10 சதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக 2020ம் ஆண்டு 199 ரன்கள் அடித்ததே ஒரு இன்னிங்சில் இவரது அதிகபட்ச ரன் ஆகும்.

இனி உங்கள நம்பி பிரயோஜனமே இல்ல; திடீரென ஓய்வை அறிவித்தார் டூபிளசிஸ் !! 2

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி சமீபகாலமாக கடுமையாக சொதப்பி வரும் நிலையில், தென் ஆப்ரிக்கா அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக டூபிளசிஸ் திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

இது குறித்து டூபிளசிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ““நான் இந்த தெளிவான மனநிலையில் தான் எடுத்துள்ளேன். அடுத்த அத்தியாயத்திற்குள் அடியெடுத்து வைக்க இதுவே சரியான தருணம். என் தாய்நாட்டுக்காக கிரிக்கெட்டின் அனைத்து பார்மெட்டுகளிலும் விளையாட எனக்கு கிடைத்த வாய்ப்பை கவுரவமாக பார்க்கிறேன். ஆனால் இப்போது நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்த உள்ளேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐசிசி டி20 உலக கோப்பை தொடர்கள் நடைபெற உள்ளன. அதற்கு என்னை ஆயத்தப்படுத்த உள்ளேன்” என அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *