இந்தியாவிற்கு இரண்டு கேப்டன்கள்? புதிய ஆலோசனையை கூறிய கபில் தேவ்! 1

இந்தியாவிற்கு இரண்டு கேப்டன்கள்? புதிய ஆலோசனையை கூறிய கபில் தேவ்!

உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை மூன்று விதமான போட்டிகள் நடைபெற்று வருகிறது. டெஸ்ட், டி20, ஒருநாள் என மூன்றுவிதமான போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளை பார்த்தால் டெஸ்ட் அணிக்கு ஒரு கேப்டன் மற்றும் ஒரு அணி, அதே நேரத்தில் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய போட்டிக்கு தனி கேப்டன் என்று நியமித்திருக்கிறார்கள்.

Kapil Dev Says Split Captaincy Cannot Work In Indian Cricket Culture |  Cricket News

அது அவர்களுக்கு பலனையும் கொடுத்திருக்கிறது.சமீபகாலமாக விராட் கோலியின் தலைமை பண்பு விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்று கூறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவரது வேலைச் சுமையை குறைக்கும் விதமாகவும் அணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும், விராட் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என்ற பேச்சுக்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது

ரோகித் சர்மாவும் தன்னை மிகச்சிறப்பாக நிரூபித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். இந்திய அணியையும் வழிநடத்தி இருக்கிறார். குறைந்தபட்சம் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பேச்சுக்கள் வந்துகொண்டு இருக்கிறது இதனை பல முன்னாள் வீரர்கள் ஆமோதித்து இருக்கின்றனர் இந்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கூறுகையில்…

Split captaincy cannot work in our culture: Kapil Dev - DTNext.in

நம்முடைய வழக்கப்படி இரண்டு கேப்டன் நடைமுறை நமக்கு ஒத்துவராது ஒரு நிறுவனத்தில் இரண்டு தலைவர்கள் இருக்க முடியாது அப்படித்தான் இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள் சேமிக்க முடியாது அது நமக்கு ஒத்துவராது என்று ஆலோசனை கூறியுள்ளார் கபில் தேவ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *