தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி வெற்றி பாதையை துவங்கியது இங்கிலாந்து
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று இங்கிலாந்து அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 311 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்ற என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்து பந்து வீச்சை மாளிக்க முடியாமல் திணறியது. 39.5 ஓவர்களில் 207 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தல் அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்க அணியில் அதிக பட்சமாக தொடக்க வீரர் டி காக் 68 ரன்கள் எடுத்தார். ஆட்டநாயகன் ஆக பென் ஸ்டோக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.