வேகபந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் பந்து வீசிய காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கடைசியாக 2013 ஆம் ஆண்டு போட்டியில் விளையாடியார். அவரது காலகட்டத்தில் முன்னணி பந்துவீச்சாளராக இருந்தார். தோனி தலைமையில் தான் இவருக்கு பல வாய்ப்புகள் அளிக்கப்பட்டது.
ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா மற்றும் அக்கீத் சவான் ஆகியோருக்கு செப்டம்பர் 2013 இல் பிசிசிஐ ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் ஒழுக்ககேடின் காரணமாக வாழ்நாள் தடையை பெற்றனர். எனினும், MCOCA சட்டத்தின் கீழ், போதிய ஆதாரங்கள் இல்லாததால், 2015 ல் டெல்லி நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவருக்கு விலக்கு வழங்கப்பட்டது.
அதன்பிறகு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் பயங்கரவாதத்தை சமாளிக்க மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தால் ஒரு சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது.
ஆனால் பிசிசிஐ எந்தவொரு கிரிமினல் நடவடிக்கைக்கும் இவர்களுக்கும் சம்மந்தம் இருப்பதாக கருதி அதன் பிறகு இவர்களை ஒப்பந்தம் செய்யவே இல்லை. இதன் விளைவாக, ஸ்ரீசாந்த் இந்தியாவிற்கோ அல்லது இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்புடைய எந்த குழுவிற்கோ களத்திற்கு திரும்பவில்லை. மேலும், அவர்களுக்கு பி.சி.சி.ஐ.யிலிருந்து இந்தியாவிற்கு வெளியே ஆடவும் அனுமதிக்க சான்றிதழ் வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு, அவர் ஸ்காட்டிஷ் கிளப் மூலம் ஒரு வாய்ப்பை பெற்றார். இருப்பினும், பி.சி.சி.ஐ. அவருக்கு NOC ஐ வழங்கவில்லை. இதனால் கடுமையான ஆத்திரமடைந்த ஸ்ரீசாந்த், அதை வெளிப்படுத்தவில்லை. ஆனால் அது கொஞ்சம் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. ஸ்ரீசாந்த் கடைசியாக வெறுப்படைந்து விட்டுவிட்டார்.
35 வயதான அவர் சமீபத்தில் ஒரு கிரிக்கெட் வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பினார். மேலும், அதற்க்கான அறிகுறியாக அவரது Instagram கணக்கில் இரண்டு பதிவுகள் பகிர்ந்து இருந்தார். இவற்றில் ஒன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஸ்ரீசாந்த் ஒரு பேட்ஸ்மேன் க்கு பந்து வீசுவது போல் இருந்தது.
View this post on InstagramA post shared by Sree Santh (@sreesanthnair36) on
ஸ்ரீசாந்த் 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி 169 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் 2007 உலகக்கோப்பை டி20 மற்றும் 2011 உலக கோப்பை வென்ற அணிகளில் ஒரு பகுதியாக இருந்து பங்களிப்பை கொடுத்துள்ளார்.