கட்டுமஸ்தான உடம்புடன் கம்பீரமாக காட்சியளிக்கும் ஸ்ரீசாந்த்; ஹர்பஜன் சிங்கை கிண்டலடிக்கும் ரசிகர்கள் !! 1
கட்டுமஸ்தான உடம்புடன் கம்பீரமாக காட்சியளிக்கும் ஸ்ரீசாந்த்; ஹர்பஜன் சிங்கை கிண்டலடிக்கும் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட்டில் மிக ஆக்ரோஷமான பவுலர் என்றால் அது ஸ்ரீசாந்தாக தான் இருக்கும். வெங்கடேஷ் பிரசாந்த், ஸ்ரீநாத் இருக்கும் போது வந்த ஸ்ரீசாந்த்  தன் ஆக்ரோஷ பவுலிங்கால் பட்டையை கிளப்பினார்.

இவரின் சிறப்பான பவுலிங்கால் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அசத்தி, அணியில் நிரந்தர இடம் பிடிக்கக்கூடிய நேரத்தில், ஐபிஎல் போட்டியில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது.

அது மட்டுமல்லாமல் மும்பை – பஞ்சாப் அணிகள் மோதியபோது ஒருமுறை ஹர்பஜனிடம் கண்ணத்தில் அறை வாங்கி ஸ்ரீசாந்த் அழுததும் உண்டு.

கட்டுமஸ்தான உடம்புடன் கம்பீரமாக காட்சியளிக்கும் ஸ்ரீசாந்த்; ஹர்பஜன் சிங்கை கிண்டலடிக்கும் ரசிகர்கள் !! 2

மேட்ச் பிக்ஸிங் வழக்கு இன்னும் நடந்துகொண்டிருக்க, அவர் கிரிக்கெட் கனவு பலிக்காத நிலையில், அவர் தற்போது ஜிம்மே கதியாக கிடக்கிறார் போல. அவர் பாகுபலி ஹீரோக்களை விட கட்டுமஸ்தானமாக உடம்பை ஏற்றி வைத்துள்ளார்.

 

அடிக்கடி அவர் ஜிம்மில் செய்யும் உடற்பயிற்சி வீடியோ, புகைப்படங்களை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. தற்போது ஹர்பஜன் சிங் பார்த்தால் இவனையா நம்ம அறைந்தோம். அடுத்து அறைய வேண்டி சூழல் வந்தாலும், எந்த யோசனையும் இல்லாமல் பின்வாங்கிவிடுவார் போன்ற உடல் கட்டமைப்பை வைத்துள்ளார்.

மற்றொரு பாடிபில்டரான ரியாஸ் கான் தற்போது தென் இந்திய நடிகர்களுக்கு உடல்கட்டமைப்பை பேணுவது எப்படி என்ற டிப்ஸை கொடுத்து வருகின்றார். அவரே ஸ்ரீசந்தை பார்த்து பாராட்டியுள்ளார்.

https://twitter.com/Candid_HRavi/status/1015074863738810369

ஸ்ரீசாந்த் கிரிக்கெட் இருந்திருந்தால் கூட இன்னேரம் ஒவ்வொரு போட்டிகளாக ஓய்வு பெற்றிருப்பார். கடைசியில் வர்ணனையாளராக வேண்டுமானால் காலத்தை தள்ளியிருக்க வேண்டியிருக்கும்.

https://twitter.com/jha_siddhus94/status/1014972766653591552

ஆனால் தற்போது பிஸி நடிகராகி விட்டார். இவர் ஒரு தொலைக்காட்சி நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் தோன்றினார். பிறகு அக்சர் 2 (இந்தி) மற்றும் டீம் 5 (மலையாளம்) போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார்.

அரசியல்வாதி :
கடந்த 2016 கேரள சட்டமன்ற தேர்தலின் போது பாஜக சார்பில் திருவனந்தபுரத்தில் போட்டியிட்ட ஸ்ரீசாந்த் 11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். ஆனால் 35 ஆயிரம் வாக்குகள் வாங்கி தன்னுடைய பலத்தை நிரூபித்தார்.
மேலும் பல்வேறு பொதுநிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படுவதோடு, பல கடை திறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *