க்ருனால் பாண்டியா, அமித் மிஷ்ரா அசத்தல்... மீண்டும் சோதப்பிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. லக்னோ அணிக்கு எளிய இலக்கு! 1

க்ருனால் பாண்டியா மற்றும் அமித் மிஸ்ரா இருவரின் அபாரமான பந்துவீச்சால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தட்டுத்தடுமாறி 20 ஓவர்கள் முடிவில் 121 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது.

லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்று வரும் பத்தாவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

க்ருனால் பாண்டியா, அமித் மிஷ்ரா அசத்தல்... மீண்டும் சோதப்பிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. லக்னோ அணிக்கு எளிய இலக்கு! 2

இந்த மைதானத்தில் குறைந்த ஸ்கோர் அடிக்கக்கூடிய பிட்ச் என்பதால், ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே நடந்தது.

பவர்-பிளே ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 43 ரன்கள் அடித்தது. மயங்க் அகர்வால் 8 ரன்களுக்கு க்ருனால் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறி இருந்தார்.

இந்த நல்ல துவக்கத்தை பெரிய ஸ்கோராக எடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தபோது க்ருனால் பாண்டியா வந்து மேலும் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்த கைப்பற்றி ஹைதராபாத் அணியை திணறடித்தார். கேப்டனாக விளையாடிய முதல் போட்டியில் கோல்டன் க்ருனால் பாண்டியா பந்தில் டக் அவுட்டாகி சோகமாக நடையை கட்டினார் எய்டன் மார்க்ரம்.

க்ருனால் பாண்டியா, அமித் மிஷ்ரா அசத்தல்... மீண்டும் சோதப்பிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. லக்னோ அணிக்கு எளிய இலக்கு! 3

துவக்க வீரர் அன்மோல்பிரீத் சிங் நன்றாக விளையாடிய 31 ரன்கள் அடித்துக் கொடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு சிறிது நேரம் ராகுல் திரிப்பாதி நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி வந்தார். அவரும் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 17 ஓவர்கள் முடிவில் 97 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது ஹைதராபாத் அணி.

கடைசியில் வாஷிங்டன் சுந்தர்(16) மற்றும் அப்துல் சமாத்(21*) இருவரும் இரட்டை இலக்க ரன்களை அடித்தனர். இதனால் ஹைதராபாத் அணியின் ஸ்கோர் 120 ரன்கள் கடந்தது.

க்ருனால் பாண்டியா, அமித் மிஷ்ரா அசத்தல்... மீண்டும் சோதப்பிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. லக்னோ அணிக்கு எளிய இலக்கு! 4

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு தட்டுத்தடுமாறி 121 ரன்கள் அடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  லக்னோ அணியின் சார்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய க்ருனால் பாண்டியா 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

லெஜன்டரி ஸ்பின்னர் அமித் மிஸ்ரா 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்தார். கட்டுக்கோப்பாக பந்துவீசிய ரவி பிஸ்னாய் நான்கு ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

க்ருனால் பாண்டியா, அமித் மிஷ்ரா அசத்தல்... மீண்டும் சோதப்பிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. லக்னோ அணிக்கு எளிய இலக்கு! 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *