இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி; டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா
இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இன்றைய இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத் அணியுடனான முதல் தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியி சியர்ல்ஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சிவம் மாவி மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
அதே போல் ஹைதராபாத் அணியில் இருந்து ஸ்ரீவாட்ஸ் கோஸ்வாமி, மணிஷ் பாண்டே மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தீபக் ஹூடா, விரதிமான் சஹா மற்றும் கலீல் அகமத் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த போட்டிக்கான ஹைதராபாத் அணி;
ஷிகர் தவான், கேன் வில்லியம்சன், ஷாகிப் அல் ஹசன், தீபக் ஹூடா, விரதிமான் சஹா, யூசுப் பதான், கார்லஸ் பிராத்வைட், ரசீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவூல், கலீல் அஹமத்.
இந்த போட்டிக்கான கொல்கத்தா அணி;
கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், நிதிஷ் ராணா, ஆண்ட்ரியூ ரசல், சுப்மன் கில், சிவம் மாவி, பியூஸ் சாவ்லா, பிரதீஷ் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.