டி.20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; முக்கிய வீரர்களுக்கு அணியில் இடம்
இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
வரும் 5ம் தேதி துவங்கும் இந்த தொடரின் முதல் போட்டி கவுகாத்தியிலும், இரண்டாவது டி.20 போட்டி (ஜனவரி 7) இந்தூரிலும், மூன்றாவது டி.20 போட்டி (ஜனவரி 10) புனேவிலும் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான பயிற்சியை இந்திய வீரர்கள் அடுத்த இரு தினங்களில் துவங்க உள்ள நிலையில், இந்த தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இந்த தொடருக்கான இலங்கை அணியில், காயம் காரணமாக கடந்த பல போட்டிகளில் விளையாடாத இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஆங்கிலோ மேத்யூஸின் பெயர் இடம்பெற்றுள்ளது. அதே போல் இலங்கை அணியின் மற்றொரு நட்சத்த்ர வீரரான டி.சில்வாவும் டி.20 தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்த தொடருக்கான இலங்கை அணியை லசீத் மலிங்காவே வழிநடத்த உள்ளார்.
டி.20 தொடருக்கான இலங்கை அணி;
லசீத் மலிங்கா (கேப்டன்), ஆங்கிலோ மேத்யூஸ், குஷால் பெரேரா, தனுஷ்கா குணதிலகா, அவிஸ்கான் பெர்னாண்டோ,பனுகா ராஜபக்ஷே, ஒசா பெர்னாண்டோ, தசுன் ஷனான்கா, நிரோசன் டிக்வெல்லா, குஷால் மெண்டின்ஸ், வானிண்டு ஹசாரனன்கா, லக்ஷன் சண்டகன், டி சில்வா, லஹிரூ குமாரா, இசுரு உடானா, கசுன் ரஜிதா