2011 மேட்ச் பிக்சிங் வழக்கு! சங்ககாரா, உபுல் தரங்காவை விசாரித்த இலங்கை போலீஸ்; வெளியான முடிவு! 1

இந்திய அணி வெற்றிபெறும் வகையில் இலங்கை வீரர்கள் விளையாடியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று இலங்கை போலீஸ் தெரிவித்துள்ளது.

டோனி தலைமையில் இந்திய அணி 2011-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உலகக்கோப்பை கிடைத்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இருந்தது.

இந்த நிலையில் 2011-ம் ஆண்டு மும்பையில் நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்சிங் எனும் சூதாட்டம் நடந்ததாக இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரி அலுத்காமகே மீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.2011 மேட்ச் பிக்சிங் வழக்கு! சங்ககாரா, உபுல் தரங்காவை விசாரித்த இலங்கை போலீஸ்; வெளியான முடிவு! 2

இறுதிப் போட்டியை இலங்கை விற்று விட்டதாகவும், வீரர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்றும், சில குழுக்கள் இதில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த சூதாட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வுப் போலீஸ் விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிட்டது. சிறப்பு புலனாய்வு பிரிவு முதலில் சூதாட்ட புகாரை தெரிவித்த இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரி அலுத்காமகேவிடம் விசாரணை நடத்தியது. அவர் சில ஆதாரங்களை சமர்ப்பித்தாக கூறப்படுகிறது.2011 மேட்ச் பிக்சிங் வழக்கு! சங்ககாரா, உபுல் தரங்காவை விசாரித்த இலங்கை போலீஸ்; வெளியான முடிவு! 3

அதைத்தொடர்ந்து 2011 உலகக்கோப்பை போட்டியின்போது தேர்வுக்குழு தலைவராக இருந்தவரும், முன்னாள் கேப்டனுமான அரவிந்த டி சில்வாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனடிப்படையில் நேற்று முன்தினம் இறுதிப் போட்டியில் தொடக்க வீரராக ஆடிய உபுல் தரங்காவிடம் புலனாய்வு பிரிவினர் 2 மணி நேரம் விசாரனை நடத்தினார்கள்.

அந்த உலக கோப்பையில் கேப்டனாக பணியாற்றிய சங்ககராவிடம் நேற்று 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இலங்கை முன்னாள் கேப்டனும், 2011 உலக கோப்பையில் துணை கேப்டனாக பணியாற்றியவருமான மகிளா ஜெயவர்த்தனேவிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் இன்று விசாரணை நடத்துனார்கள்.2011 மேட்ச் பிக்சிங் வழக்கு! சங்ககாரா, உபுல் தரங்காவை விசாரித்த இலங்கை போலீஸ்; வெளியான முடிவு! 4

விசாரணையின் முடிவில் இலங்கை வீரர்கள் இந்திய அணி வெல்ல அனுமதித்ததற்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவித்த இலங்கை போலீசார் வழக்கை கைவிட்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *