இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் SLC ஜிம்பாப்வே அணி இலங்கை நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளது.
வருகிற ஜனவரி மாதம் ஜிம்பாப்வே அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் முதல் போட்டியானது ஜனவரி 16ம் தேதியும் இரண்டு மற்றும் மூன்றாவது போட்டி 18 மற்றும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடைசியாக ஜிம்பாப்வே அணியுடன் இலங்கை அணி பங்களாதேஷில் நடைபெற்ற முத்தொடர் போட்டியில் பங்கேற்று விளையாடியது, அதில் ஜிம்பாப்வே அணி 3-2 எனத் தொடரை வென்று சாதனை படைத்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினாலும், ஒரு நாள் தொடரில் இலங்கை அணி மிகவும் மோசமாகவே விளையாடி வருகிறது.
தற்பொழுது பரிதாபமான நிலையில் இருக்கும் இலங்கை அணி தனது சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணியை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் கடுமையான பயிற்சியிலும் சிறந்த திட்டங்களை வகுப்பதிலும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் மற்றும் தற்போதைய இலங்கை அணியின் ஆலோசகரான மஹேல ஜெயவர்தனே முழுவீச்சாக இலங்கை அணி வெற்றி பெறுவதற்கான அனைத்து யோசனைகளை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மனதில் அவப்பெயரை சம்பாதித்து வைத்திருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் வெற்றி பெறுவதன் மூலம் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தான் ஆடும் காலங்களில் சிறப்பாக செயல்பட்ட ஜெயவர்தனே ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியும் மிக சிறப்பாக செயல்பட்டு மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு உதவியாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.