இந்தியா இலங்கை இடையேயான கொலும்புவில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று களம் இறங்கிய இலங்கை அணி காலை துவக்கத்திலேயே சொதப்பியது.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது இலங்கை. தொடக்க முதலே விக்கெட்டுகளை சாய்க்க துவங்கிய அஷ்வின் மற்றும் ஜடேஜா இலங்கையின் பேட்ஸ்மேன்களை பங்கம் செய்ய துவங்கினர்.
அஷ்வின் வீசிய 33 வது ஓவரின் 6 வது பந்தை எதிர் கொண்ட ஆஞ்சலோ மேத்யூஸ் ஆஃப் ஸ்டெம்ப்பில் நகர்ந்து தொடைக்கு மேல் பவுன்ஸ் ஆகி வந்த பந்தை ஃப்லிக் செய்து விட அது நேராக லெக் ஸ்லிப்பில் ஹெல்மெட்டுடன் நின்றிருந்த புஜராவின் இடப்பக்கம் செல்ல அதை தனது இடப்பக்கம் விழுந்து உருண்டு பிடித்தார் செட்டேஸ்வர். சரியாக கணித்து மிக்ச்சரியாக லாவகமாக பந்தை பிடிதார் புஜாரா,
பார்ப்பதற்க்கு ஒரு நொடிக்கும் குரைவான நேரத்தில் நடந்தது போல் இருந்தாலும் இது போன்ற ஒரு கேட்ச் பிடிப்பதற்க்கு மிக கனமான கணிப்பும் ஆட்டத்தின் விழிப்புணர்வும் வேண்டும். இது போன்ற கேட்ச்களை பிடிக்க நாம் நிற்க்கும் இடத்தின் மிக்கியத்துவத்தை அறிந்திருத்தல் வேண்டும். அந்த விளிப்புணர்வு செட்டீஸ்வர் புஜராவிற்க்கு அதிகம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
பின்னர் இமாலய பணியை முன்னே வைத்து ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை இன்று மிக கடுமையாக போராடும் என்று நினைத்த நமக்கு ஏமற்றம் தான் மிஞ்சியது. அஷ்வின் மற்றும் ஜடெஜாவின் சுழலை சாமாளிக்க முடியாத அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து சீட்டுக்கட்டு சரிந்ததை போல் சரிந்தனர். அஷ்வின் இன்னொரு 5 விக்கெட்டை வீழ்த்தினார்.
ஜடெஜா தனது வழக்கமான வேலையான ரன் கட்டு படுத்தலை தொடர்ந்தார். 22 ஓவர்களை வீசிய அவர் 84 ரன்கள் கொடுத்து தனது பங்கிற்க்கு 2 விகெட்டுகளையும் வீழ்த்தினார். ஒரு நேரத்தில் 9 ஓவர்களுக்கு வெரும் 11 ரன்களை மட்டுமே விட்டு கொடுதிருந்த அவர் பின்னர் வீசிய ஒவர்களில் ரன்களை வாரி வழங்கியிருக்கிறார்.
மொஹம்மது ஷமி தனது பங்கிற்க்கு 2 விக்கெட்டுகளின் ஸ்டெம்புகளை பறக்க விட்டார். பின்னர் உமேஷ் யாதவ் ஒரு விக்ட்டை வீழ்த்த இலங்கை அணி 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளைஉம் இழந்து ஆல் அவுட் ஆனது.
இலங்கை அணியில் நிரோஷன் டிக்வெல்லாமட்டுமே அதிரடியாக ஆடி 48 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். அதில் 7 பவுண்ரிகள் அடங்கும். பின்னர் தேவை இல்லாத ஒரு ஷாட்டினால் தனது ஸ்டெம்பை பறி கொடுத்து விட்டு பெவிலியன் திரும்பினார். பின்னால் திரும்பி கீப்பரின் தலைக்கு மேல் அடிக்க நினைத்து பந்தை ஸ்டெம்பில் தள்ளி விட்டு பரிதாபகரமாக வெளியேறினார்.
தற்போது ஃபாலோ ஆன் செய்து ஆடி வரும் இலங்கை அணி துவக்கதிலேயே உபுல் தரங்காவை அஷ்வினிடம் பறிகொடுத்து 14.1 ஓவெரில் 52/1 என்ற நிலையில் ஆடி வருகிறது. இந்த முறையும் உபுல் தரங்கா அஷ்வினிடம் வீழ்ந்தார் அதும் இரு இன்னிங்கசிலும் டக் அவுட் ஆனார் என்பதும் குற்ப்பிடத்தக்கது.
இலங்கையின் கடைசி 5 விக்கெட்டுகளும் ஃபோல்டு என்படும் குறிப்பிடத்த்க்கது. அநேகமாக இந்திய அணி இன்றே வெற்றி பெற்றாலும் ஆச்ச்ரியம் ஒன்றும் இல்லை.