இந்திய ,இலங்கை டெஸ்ட்- இன்றய 5 முக்கிய நிகழ்வுகள்

இந்தியா இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இல்ங்கையில் உள்ள கொலும்புவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் முதல் நாளலான இன்று டாசில் வென்ற கேப்டன் கோலி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். முதல் டெஸ்ட் போட்டியை போலவே இந்த டெஸ்டிலும் முதல் நாளான இன்றே தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 344/3 என்ற வலுவான நிலையில் உள்ளது. இந்த நிலையில் இருந்து இலங்கை தனது ஆதிக்கத்தை செலுத்த வேண்டுமாணால் இரண்டாவது நாளான நாளை அந்த அணி பெருமளவில் போராட வேண்டியிருக்கும்.

இன்றைய சிறப்பான ஐந்து நிகழ்வுகளை காண்போம் :

5. கே எல் ராகுலின் வருகை

தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டு நீண்ட நாட்களுக்கு பின்பு அணிக்கு திரும்பியிருந்தாலும், தனது வழக்கமான ஃபார்மில் உள்ளார். 57 ரன்கல் அடித்து நம்பிக்கை ஏற்ப்படுத்திய கே எல் ராகுல் அவருடைய ஆட்டத்தில் பல நல்ல ஷாட்களையும் நம்மால் பார்க்க முடிந்தது. துரதிர்ஷ்டவசமாக கே எல் ரன் அவுட் ஆகிவிட்டார். இல்லை எனில் அவருடைய அரை சதம் சதமாக மாற்ற பட வாய்ப்புகள் அதிகமே.

இந்திய ரசிகர்கள் ராகுலின் ஃபார்ம் மற்றும் டச்சினால் சந்தோசம் தான் அடைவார்கள் எனலாம்.

4.இலங்கை வீரர் மலிண்டா புஷ்பகுமாராவின் அறிமுக ஆட்டம் :

மலிண்டாவின் அறிமுகம் சற்று வித்யாசமான ஒன்றாகும். 30 வயதான இடக்கை சுழற்ப்பந்து வீச்சாளரான அவர் ஏற்கனவே 99 முதல் தர போட்டிகள் ஆடியுள்ளார். 99 போட்டிகளில் 558 விக்கெட்களை சாய்த்துள்ளார். அவரது சராசரி 20க்கும் குறைவே ஆகும்.

முதல் தர போட்டியில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அவரது ஆட்டம் இர்ந்தாலும் 30 வயதை நெருங்கிய அவருக்கு வாய்ப்புக்ள் வழங்க தேர்வாளர்கள் முனையவில்லை.தற்போது இலங்கை அணி சிறிது மோசமான் நிலைமையில் உள்ளதால் திறமைக்கும் வாய்ப்பு வழங்குகின்ரனர். மேலும் மலிண்டாவை அவர்கள் அதிர்ஸ்ட்டம் தட்டும் கதவாகவும் பயன்படுத்துவதாக தெறிகிரது.

3. அரங்கேற்றம் போல் ஆன இலங்கையின் சுழற்ப்பந்து வீச்சு

சுழற்ப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான கொலும்பு பிட்ச்சில் இலங்கை சுழற்ப்பந்து வீச்சாளர்களுக்கு இன்று அவ்வளவு நல்ல நாளாக அமையவில்லை. அவர்களின் பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கல் நாலா பக்கமும் சிதறடித்தனர்.

2. புஜாரவின் இலங்கை மாயாஜால்ம் தொடர்கிரது

செட்டேஸ்வர் புஜாரா இந்தியா தடுப்புச்சுவர் மற்றுமோர் சதம் அடித்து இலங்கை பந்து வீச்சள்ளர்களை பங்கம் செய்தார். இவருக்கு பந்து வீச இலங்கை அணியினரால் முடியவில்லை. எப்படி போட்டலும் மனுசன் கட்டய தான் வைக்கிறார்.
ஆப்டியே ஆடி மறுபடியும் ஒரு சதம் அடித்தார். 225 பந்துகளுக்கு 128 ரன்கள் அடித்து பவுளர்களை பங்கம் செய்தார் .

1.ரஹானேவின்அதிரடி

விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் அடுத்தடுத்து வெளியேறிய பின் ரஹானேவும் புஜராவும் இணைந்தனர். இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதில் ரஹானேவின் அடிரடி ஆட்டமும் அவரது அற்புதமான் ஷாட்களும் பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. அவரும் அவர் பங்கிற்க்கு ஒரு சதம் போட்டு தள்ளினார். 168 பந்துகளுக்கு 103 ரன்கள் விளாசினார். அதில் 12 பவுண்ட்ரிகளும் அடங்கும்.

ராஹ்னேவின் மனைவி ராதிகா ரஹானேவின் சதத்தை கொண்டடுகிறார்.

Editor:

This website uses cookies.