இலங்கை vs இந்தியா 2017: வாய்ப்பு கிடைத்ததும் அரைசதம் அடித்த மனிஷ் பாண்டே

இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் வாய்ப்புக்கு காத்திருந்த மனிஷ் பாண்டே, இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார்.

இலங்கைக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் லோகேஷ் ராகுல் மாற்று கேதார் ஜாதவுக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் மூன்று போட்டிகளிலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாத ஜாதவ், 4வது ஒருநாள் போட்டியில் விளையாட இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக அணியில் இடம் பெற்ற மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற தொடரில் சிறப்பாக விளையாடிய மனிஷ் பாண்டே, 4வது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். 13 போட்டிகளில் 396 ரன்கள் என சிறப்பாக விளையாடிய மனிஷ் பாண்டே, தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் அதிக ஸ்கோர் அடித்து அசத்தினார். தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் 55, 41*, 86*, 93* மற்றும் 32* என ஸ்கோர் அடித்து, அந்த தொடரில் அதிக ஸ்கோர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை 168 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்திய பிறகு, தென்னாபிரிக்காவில் சிறப்பாக ஆடியது தான் இன்று எனக்கு கை கொடுத்தது என கூறினார் மனிஷ் பாண்டே.

“நீங்கள் தெறி பார்மில் இருந்தால் அது கண்டிப்பாக உதவி செய்யும். இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கும், அந்த வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போது, அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என மனிஷ் பாண்டே கூறினார்.

“ஜூனியர் இந்திய அணிக்காக தென்னாபிரிக்காவில் சிறப்பாக விளையாடினேன். அதே போல் தான் இங்கேயும் விளையாடினேன். இதில் எந்த ஆச்சரியமும் இல்லை,” என மேலும் கூறினார்.

“தோனியுடன் சில போட்டிகளில் விளையாடியுள்ளேன். அவர் எப்படி விளையாடுவார் என்று எனக்கு தெரியும். அவர் எப்போதுமே ரன் ஓடி கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பார், இதனால் நிறைய சிங்கல்ஸ் அடிப்பார். அது போல் விளையாடுபவரோடு விளையாடுவது தான் எனக்கு பிடிக்கும். நடுவில், நாங்கள் சில பவுண்டரிகளை அடித்தோம். உங்களுக்கு தோனி பல அறிவுரைகளை கூறுவார்,” என பாண்டே தெரிவித்தார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.