தோனிக்கு 250ஆவது சர்வதேச வெற்றி
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் கொலும்புவில் நடந்த டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மகேந்திர சிங் தோனிக்கு 250ஆவது சர்வதேச வெற்றியாகும்.
250க்கும் அதிகாமான சர்வதேச வெற்றிகளை ருசித்த வீரர்கள் பட்டியள்
ரிக்கி பாண்டிங் – 377 வெற்றிகள்
மிகிலா ஜயவர்தனே – 336 வெற்றிகள்
சச்சின் டெண்டுல்கர் – 307 வெற்றிகள்
ஜகுவஸ் காலிஸ் – 305 வெற்றிகள்
குமாரா சங்ககாரா – 305 வெற்றிகள்
சனத் ஜயசூரியா – 292 வெற்றிகள்
சாகித் அஃப்ரிடி – 283 வெற்றிகள்
ஸ்டீவ் வாக் – 282 வெற்றிகள்
ஆடம் கில்கிறிஸ்ட் – 282 வெற்றிகள்
மார்க் பௌச்சர் – 269 வெற்றிகள்
இன்சமாம் உல் ஹக் – 265 வெற்றிகள்
முரளிதரன் – 265 வெற்றிகள்
க்ளென் மெக்ராத் – 256 வெற்றிகள்
தோனி – 250* வெற்றிகள்
இந்திய அணி அற்புதமாக விளையாடி இலங்கை சுற்றுப் பயணத்தில் நடந்த மூவகை தொடர்களிலும் வென்று மொத்த 9 போட்டிகளையும் வலித்து சாதனை படைத்தது.
இதனை பற்றி கேப்டன் விராத் கோலி கூறியதாவது,
‘‘இந்திய அணி முழுமையான மகத்தான தரத்துடன் உள்ளது.
அணியின் தலைவரான கோஹ்லியின் உத்தரவுக்கு களத்தில் கிடைத்த மரியாதையை பார்த்திருப்பீர்கள்.
அணி வீரர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணமாக இருந்து, அவர்களை வழிநடத்திச் செல்கிறார்.
அப்படிப்பட்ட கேப்டனுக்கு கிடைத்திருக்கும் மகத்தான பரிசு இந்த வெற்றி.
கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் கடைசி போட்டியிலும் இந்திய அணி போராடி வென்ற அந்த குணம் பாராட்டுக்குரியது.
இந்திய வீரர்களிடமிருந்து இலங்கை வீரர்கள் நிறைய பாடம் கற்க வேண்டும்’’ என்றார்.
இலங்கை பயணத்தை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அடுத்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடுகிறது. இலங்கையில்
வரும் 17ம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது.
இலங்கையை முழுமையாக ஒயிட்வாஷ் செய்தது குறித்து இந்திய கேப்டன் கோஹ்லி கூறுகையில்,
‘‘அனைத்து போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது மிகவும் சிறப்பானது. இதை திட்டமிட்டு செய்யவில்லை.
இந்த பாராட்டு எல்லாம் சக வீரர்களை தான் சேரும். அணியில் உள்ள 15 பேரும் நல்ல நிலையில் இருப்பதால் வலிமை பெற்றுள்ளோம். இதனால், முடிவுகள் அற்புதமாக இருக்கிறது.
எனது ஆட்டம் நல்ல நிலையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து வடிவிலான போட்டியிலும் எனது ஆட்டம் சிறப்பாக இருக்கவே விரும்புகிறேன்’’ என்றார்.