தோள்பட்டை காயத்திற்கு சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும் தனுஷ்கா குணதிலகாவுக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த தினேஷ் சந்திமால் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பிடித்தார். ஆனால், அவருக்கும் காயம் ஏற்பட்டதால் இந்தியா – இலங்கை விளையாடும் போட்டியில் இருந்து விலகினார்.
3வது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்சின் போது, ஹர்டிக் பாண்டியா வீசிய பந்தை கையில் அடி வாங்கினார். பாவம் பார்க்காத பாண்டியா, மீதம் உள்ள பந்துகளையும் முகத்திற்கு எழுப்பினார். இதனால், அந்த ஓவரை விளையாட சந்திமால் திணறினார்.
“சந்திமாலின் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது, இனி இந்த போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்,” என இலங்கை அணியின் இயக்குனர் கூறினார்.
இந்த தொடரில் இருந்தே விலகுவதற்கு வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வந்துள்ளன. ஆனால், இதை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்னும் அறிவிக்கவில்லை.
“அவர் மேலும் இந்த தொடரில் விளையாடுவாரா விளையாடமாட்டாரா என்பதை நாளை “அறிவிப்போம், என இலங்கை அணியின் இயக்குனர் கூறினார்.
சிங்கிள்ஸ் அடிக்க முடியாத சந்திமால், நான்கு பவுண்டரிகளை விளாசினார். 71 பந்துகளில் 36 ரன் அடித்திருந்த சந்திமால், ஹர்டிக் பாண்டியா வீசிய பந்தில் பும்ராவிடம் வசப்பட்டார்.
இந்த காயம் காரணமாக, இன்று இரவு சிகிச்சை எடுத்துக்கொள்ள போவதாக தகவல் வந்துள்ளது.
முதல் இன்னிங்ஸ் முடிந்த நிலையில், இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 218 ரன் அடித்தது. இந்திய அணியின் ஜேஸ்ப்ரிட் பும்ரா சிறப்பாக வீசி 5 விக்கெட்டுகளை அள்ளினார்.