டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று துவங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியான இன்றைய போட்டியில் இலங்கை அணியும், நமீபியா அணியும் மோதுகின்றன.
ஆஸ்திரேலியாவின் சிம்மண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
நட்சத்திர வீரரான தில்சன் மடுசனாகா காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடாததால், பிரமோத் மடுசான் இலங்கை அணியின் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் இலங்கை அணியின் மிக முக்கிய வீரரான சம்மீராவும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்.
இன்றைய போட்டிக்கான நமீபியா அணியின் ஆடும் லெவனில் ஸ்டீவப் பிராட், டேவிட் வீஸ், ஸ்மித், மைக்கெல் வான் லிங்கன், பென் ஸிகாங்கோ போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நமீபியா அணியின் ஆடும் லெவன்;
ஸ்டீபன் பிராட், டேவிட் வீஸ், கெர்ஹர்ட் எராஸ்மு, ஜான் நிக்கோல், ஸ்மித், ஜான் ஃபிர்லின்க், ஜான் க்ரீன், டீவன் லா கூக், மைக்கெல் வான் லிங்கன், பெர்னார்ட், பென் ஸிகாங்கோ.
இலங்கை அணியின் ஆடும் லெவன்;
பதும் நிஷான்கா குசால் மெண்டீஸ், டி சில்வா, தனுஷ்கா குணதிலகா, பனுகா ராஜபக்சே, தசுன் ஷனாகா, வானிது ஹசரங்கா, சமீகா கருணாரத்னே, சம்மீரா, பிரமோத் மடுசான், மகேஷ் தீக்ஷன்னா.