இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எங்கள் நாட்டில் நடத்துங்கள்; பிசிசிஐ-க்கு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை! 1

இந்தியா-இங்கிலாந்து தொடரை எங்கள் நாட்டில் நடத்துங்கள்; பிசிசிஐ-க்கு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை!

வருகிற ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எங்கள் நாட்டில் நடத்துங்கள் என இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ இடம் விருப்பம் தெரிவித்து இருக்கிறது.

மார்ச் மாதம் இறுதியிலிருந்து இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் தற்போது வரை கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த அனுமதி கிடைக்காததால், இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பிசிசிஐ நடத்த உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்துவிட்டன.

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எங்கள் நாட்டில் நடத்துங்கள்; பிசிசிஐ-க்கு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை! 2

தற்போது வரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், மீண்டும் எப்போது கிரிக்கெட் தொடர் துவங்கும் என்பது தெரியவில்லை. நவம்பர் மாதம் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் நடைபெறவிருப்பதால் இந்திய வீரர்கள் அங்கு சென்று விடுவர்.

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு ஜனவரி மாதம் இந்தியா திரும்பும் இந்திய வீரர்கள் ஒரு சில தினங்களிலேயே இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கின்றனர். இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எங்கள் நாட்டில் நடத்துங்கள்; பிசிசிஐ-க்கு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை! 3

இந்தியாவில் மீண்டும் எப்போது கிரிக்கெட் தொடர் துவங்கும் என்பது சரிவர தெரியாததால் இந்தியா – இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் எங்கள் நாட்டில் நடத்தினால் நன்றாக இருக்கும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் முன்வந்து பிசிசிஐ இடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எங்கள் நாட்டில் நடத்துங்கள்; பிசிசிஐ-க்கு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை! 4

இதுகுறித்து தற்போது கருத்தை தெரிவிக்க பிசிசிஐ தரப்பு மறுத்து வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு இன்னும் நான்கு மாதங்களுக்கு மேலான காலம் இருப்பதால் அதற்குள் கொரோனவைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்படலாம் என பிசிசிஐ எண்ணி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *