சவுத் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக இலங்கை அணி சிறந்த அணியை தேர்வுசெய்துள்ளது. முதலில் சவுத் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
அதன்பின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதற்காக இலங்கை அணி 22 பேர் கொண்ட வீரர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் மற்றும் முன்னாள் கேப்டனான ஆங்கிலோ மேத்யூஸ் விளையாடமாட்டார் என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆங்கிலோ மேத்யூஸ் இடம்பெறவில்லை என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குஷால் பெரேரா, துஷ்மந்த சமீரா, தசுன் சனாகா ஆகிய அனுபவ வீரர்கள் மீண்டும் இலங்கை அணியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சவுத் ஆப்பிரிக்காவிற்க்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டியின் முதல் போட்டி டிசம்பர் 26 முதல் 30ஆம் தேதி வரை சூப்பர் ஸ்போர்ட் பார்க்கில் நடைபெற உள்ளது.
அதன்பின் ஜனவரி 14 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணி தேர்வு செய்த 22 வீரர்கள்
திமுத் கருணாரத்ன, குஷால் ஜனித் பெரேரா, தினேஷ் சண்டிமால், குஷால் மெண்டிஸ், ஆங்கிலோ மேத்யூஸ், டில்ருவான் பெரேரா, சுரங்க லக்மால்,லஹீரு குமாரா, விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ரஜிதா, துஷ்மந்த சமீரா, தசுன் சனாகா, சந்தோஷ் குணதிலக, அசித்தா பெர்னாண்டோ, தில்சன் மதுசன்கா, ஒஷாடா பெர்னான்டோ, தனஜயன் டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, மினோத் பனுகா, லஹிரூ திருமண்ணே, லஷீத் எம்புல்டனிய வனிண்டு ஹசிரங்கா .