2019 உலகக்கோப்பையில் இலங்கை அணி இல்லை? 1

2019ல் நடைபெறும் உலககோப்பை தொடரில் நேரடியாக  தேர்வு பெற தற்போது  இலங்கை அணி சிக்கலில் மாட்டியுள்ளது. அதாவது உலகக்கோப்பை தொடரில் தர வரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள அணிகள் மட்டுமே நேரடியாக தேர்வாகும். அதிலும் ஒரு நிபந்தனை உள்ளது. அதாவது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு கால அளவை நிர்ணயிக்கும் அந்த கால கட்டத்தில் ஒரு நாள் தர வரிசையில் முதல் 8 இடத்தில் இடம்பெறும் அணிகள் மட்டுமே நேரடியாக லீக் போட்டியில் விளையாட முடியும். 2019 உலகக்கோப்பையின் நிர்ணயிக்கப்பட்ட கால அளவு வரும் செப்டம்பர் 10 தேதி.

2019 உலகக்கோப்பையில் இலங்கை அணி இல்லை? 2

தம்புல்லாவில் நாளை தொடங்கும் இந்தியாவுடனான ஒரு நாள் தொடரில், குறைந்தது 2 போட்டிகளிலாவது வெற்றிபெற்றால் மட்டுமே உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நிலை, இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

2019 உலகக்கோப்பையில் இலங்கை அணி இல்லை? 3

இதன்படி முதல் 5 இடங்களில் தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் உள்ளன. இலங்கை அணி 8-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 9-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 10-வது இடத்திலும் இருக்கின்றன. தம்புல்லாவில் நாளை தொடங்கும் இலங்கைக்கு எதிராக ஒரு நாள் தொடரை இந்திய அணி 5-0 அல்லது 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் 3-வது இடத்தை தக்கவைக்க முடியும். இலங்கை அணியை பொறுத்தவரை இந்தப் போட்டியில் குறைந்தது 2 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும்.

2019 உலகக்கோப்பையில் இலங்கை அணி இல்லை? 4

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், அடுத்த மாதம் 30-ம் தேதி நிலவரப்படி தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் அணிகள் மட்டுமே நேரடி தகுதி பெற முடியும். எஞ்சிய இரு இடத்திற்கு தகுதி சுற்றில் விளையாட வேண்டி இருக்கும்.அந்த வகையில் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால்,

2019 உலகக்கோப்பையில் இலங்கை அணி இல்லை? 5

புள்ளி எண்ணிக்கை 90-ஆக உயர்ந்து 8-வது இடத்தில் நீடிக்கும். உலக கோப்பை போட்டிக்கும் நேரடி தகுதி பெற்று விடும். இதன் காரணமாக நாளை தொடங்கும் ஒரு நாள் தொடரில் இந்திய அணிக்கு, இலங்கை அணி கடும் சவாலாக விளங்கும் என்று தெரிகிறது.
அப்படி இலங்கை அணி வெற்றி பெறாத பட்சத்தில் அந்த அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் கத்துக்குட்டி அணிகளுடன் விளையாடி வெற்றி பெறும் பட்சத்தில் உலகக்கோப்பைக்கு தகுதி பெறும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *