வங்கதேச அணியை "ஒய்ட்வாஷ்" செய்த இலங்கை!! 1

வங்கதேச அணி முழுவதுமாக வீழ்த்தி 3-0 என தொடரை கைப்பற்றியது இலங்கை அணி.

உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றது. வங்கதேச அணியின் கேப்டன் மஸ்ரபி மோர்ட்டாசா காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டதால், மூத்த வீரர் தமிம் இக்பால் தலைமைப் பொறுப்பை ஏற்று அணியை வழி நடத்தினார்.

அதேபோல இலங்கை அணிக்கு கருணாரத்னே கேப்டன் பொறுப்பை ஏற்று வழி நடத்தினார். இதில் முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேச அணியை "ஒய்ட்வாஷ்" செய்த இலங்கை!! 2

இப்போட்டி முடிவு பெற்றவுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓய்வு பெற்றார். இவர் 338 விக்கெட்டிகள் வீழ்த்திய சாதனையுடன் விடைபெற்றார்.

இதனை அடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 238 ரன்கள் எடுத்தது. அதனை எளிதாக கடந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றது.

வங்கதேச அணியை "ஒய்ட்வாஷ்" செய்த இலங்கை!! 3

இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 294 ரன்கள் அடித்தது. அடுத்ததாக களமிறங்கிய வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில், 122 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி மிகப்பெரிய வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றியது.

3வது போட்டியில் 88 நாட்கள் நடித்ததன் மூலம் ஆட்டநாயகன் விருதினை ஏஞ்செலோ மேதியூஸ் கைப்பற்றினார்.

மூன்று போட்டிகளிலும் நன்கு பேட்டிங் செய்ததால், தொடர் நாயகன் விருதும் இவருக்கே கொடுக்கப்பட்டது.

இது, சுமார் 44 மாதங்களுக்கு பிறகு இலங்கை அணி தனது சொந்த மண்ணில் வென்ற முதல் தொடர் ஆகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *