டி வில்லியர்ஸ் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் சிறப்பான பார்மில் உள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விளையாடி கொண்டிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால், தொடர்ந்து 12 டெஸ்ட் போட்டிகளில் அரைசதமாது அடித்து தென்னாபிரிக்காவின் டி வில்லியர்ஸ் சாதனையை சமன் செய்தார்.

அந்த 12 அரைசதங்களில் முதல் அரைசதம் கடந்த வருடம் அக்டோபரில் வங்கதேச அணியுடன் அடித்தார். அதன் பிறகு இந்தியாவில் 124 ரன் அடித்தார், ஆனால் அந்த போட்டியை இந்திய அணி ட்ரா செய்து விட்டது. அந்த டெஸ்ட் தொடரையும் இந்திய நீ 4 – 0 என்ற கணக்கில் வென்றது. ஆனால், ஜோ ரூட் தனது மனம் தவறவிடாமல், அந்த தொடரில் சிறப்பாக விளையாடி 491 ரன் அடித்தார். அதில் ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதங்களும் அடங்கும்.

அதன் பிறகு தென்னாப்ரிக்காவுடன் அற்புதமாக விளையாடினார். தென்னாப்ரிக்காவுக்கு எதிராகவும் மூன்று அரைசதம் மற்றும் ஒரு சதம் அடித்தார் ரூட். தற்போது நடந்து கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில், முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு அரைசதம் அடித்துவிட்டார். இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஒரு அரைசதம் அடித்து விட்டார்.

மொத்தமாக, 12 டெஸ்ட் போட்டியில் 1202 அடித்துள்ளனர் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்.

ஜோ ரூட் மற்றும் டி வில்லியர்ஸுக்கு அடுத்த படியாக 11 டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் அடித்தவர்கள் – விரேந்தர் சேவாக், கவுதம் கம்பிர், விவ் ரிச்சர்ட்ஸ், மொமினல் ஹக் ஆகியோர் உள்ளனர்.

தொடர் டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் எண்ணிக்கை மற்றும் வீரர்களின் விவரம்:

12 – ஏபி டி வில்லியர்ஸ், ஜோ ரூட்

11 – விவ் ரிச்சர்ட்ஸ், விரேந்தர் சேவாக், கவுதம் கம்பிர், மொமினல் ஹக்

10 – ஜான் எட்ரிச், சச்சின் டெண்டுல்கர்

9 – எவெர்ட்டன் வீக்ஸ், அலெக் ஸ்டீவர்ட், மத்தியூ ஹேடன், ஜாக் காலிஸ், சைமன் கேட்டிச், குமார் சங்ககரா

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.