சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி ஒரு நல்ல ஸ்கோர் அடித்தாலே பெரிய விஷயம், அதிலும் சதம் அடித்தாலும் ஒரு நல்ல வீரருக்கான அடையாளம் என்று கூறுவார்கள். இது வரை கிரிக்கெட்டில் பல வீரர்கள் விளையாடி உள்ளார்கள், அதில் சில வீரர்கள் 10 சதம் கூட அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையில் அடித்திருக்க மாட்டார்கள். ஆனால், சில வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதம் அடித்திருக்கிறார்கள். அதுவும், குறைவான இன்னிங்சில் அடித்தால் கண்டிப்பாக அது பெரிய விஷயம் தான். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 50 இன்னிங்சில் அடித்தவர்கள் பட்டியலை பார்க்கலாம்.
மஹேலா ஜெயவர்தனே – 667
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மஹேலா ஜெயவர்தனே இலங்கை அணிக்காக பல சதம் அடித்து இலங்கை அணியை வெற்ற பெற வைத்துள்ளார். தனது 667வது இன்னிங்சில் தான் சர்வதேச கிரிக்கெட்டில் 50வது சதத்தை அடித்தார் மஹேலா ஜெயவர்தனே.
குமார் சங்ககரா – 593
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் குமார் சங்ககரா தனி ஆளாகவே பல போட்டிகளில் வென்றுள்ளார். அவர் இலங்கை அணிக்காக பல வருடங்களாக விளையாடி வந்தார். அவரது 593வது இன்னிங்சில் தான் 50வது சர்வதேச சதத்தை அடித்தார்.
ஜாக் காலிஸ் – 520
தென்னாபிரிக்காவின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஜாக் காலிஸ் தான் முக்கியம். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் எதிரணிக்கு சவால் கொடுப்பார். பல வருடங்களாக விளையாடி கொண்டிருந்த ஜாக் காலிஸ், சர்வதேச போட்டிகளில் அவருடைய 520வது இன்னிங்சில் தான் அவரது 50வது சர்வதேச சதத்தை அடித்தார்.
ரிக்கி பாண்டிங் – 428
ரிக்கி பாண்டிங், என்ற பெயரின் சொன்னாலே நமக்கு ஞாபகம் வருவது ஆஸ்திரேலிய அணிக்கு அவர் வாங்கி கொடுத்த உலககோப்பைகள் தான். சிறந்த கேப்டனாக மட்டும் இல்லாமல், பேட்டிங்கிலும் அவர் கலக்கி கொண்டிருந்தார். ஆஸ்திரேலிய அணிக்காக பல போட்டிகளில் விளையாடிய அவர், அவரது 428வது இன்னிங்சில் அவரது 50வது சதம் அடித்தார்.
சச்சின் டெண்டுல்கர் – 376
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைப்பார்கள். அதற்கு காரணமே அவர் வைத்துள்ள சாதனைகள் தான். அதில் ஒரு சாதனை தான் இது. அவரது 50வது சர்வதேச சதத்தை அவரது 376வது இன்னிங்சின் போது அடித்தார். ஆனால், பல வருடங்கள் கழித்து ஆம்லா மற்றும் கோலி ஆகியோர் இந்த சாதனையை பறித்தார்கள்.
ஹசிம் ஆம்லா – 348
தென்னாபிரிக்காவின் நட்சத்திர தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா தனது 348வது சர்வதேச இன்னிங்சில் 50வது சதம் அடித்து அசத்தினார். இதனால், இந்த சாதனையை இதற்கு முன்பு வைத்திருந்த சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து ஆம்லா பறித்து விட்டார்.
விராட் கோலி – 348
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது தனது சர்வதேச கிரிக்கெட்டில் 50வது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். ஆம்லாவை போல் இவரும் 348வது இன்னிங்சில் 50வது சதம் அடித்ததால், குறைந்த இன்னிங்சில் 50 சர்வதேச சதங்களை அடித்த பெருமையை பெற்றார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.