100 ரன் பார்ட்னர்சிப்
இந்தியா இலங்கை இடயேயான 4ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடி 375 ரன்களை குவித்தது. அதனுடன் சேர்த்து சில வரலாற்றுப் பக்கங்களையும் திருப்பி மாற்றி எழுதியது. 100 ரன்.
முதலில் ரோகித் – விராட் இணை தங்களது பார்ட்னர்சிப்பில் 200+ ரன் குவித்தது. பின்னர் 6வது விக்கெட்டிற்கு தோனி- மனீஷ் ஜோடி 100+ ரன் பார்ட்னர்சிப் வைத்தது.
இதன் மூலம் பல சாதனைகளை படைத்திருக்கிறது. தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக 100+ பார்ட்னர்சிப் வைத்த 5 அணிகளை பார்ப்போம்.
தோனி-மனீஷ் ஆடிய அந்த 100+ பார்ட்னர்சிப் இந்தியாவின் 400ஆவது 100+ ஒருநாள் போட்டி பார்ட்னர்சிப் ஆகும்.
5.தென்னாப்பிரிக்கா – 239 100+ பார்ட்னர்சிப்
தடை செய்யப்பட்ட தென்னாப்பிரிக்க அணி 1991ல் தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டது. அதிலிருன்ந்து பார்த்தால் இந்த 239 என்பது அதிகம் தான்.
ஆனால், ஸ்மித், டி வில்லியர்ஸ், கிப்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ள அணி இது. இதற்க்கான வாய்ப்புகள் சற்று அதிகம் தான்.
ஆனால், இந்த அணி இன்னும் ஒரு சர்வதேச கோப்பையை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்த்க்கது.
4.பாகிஸ்தான் – 257 100+ பார்ட்னர்சிப்
இன்சமாம், மியான் தத், ஜாகிர் அப்பாஸ், முகமது யூசப், யூனிஸ் கான் போன்ற திறமை வாய்ந்த வீரகளினால் இந்த அபரிவிதமான சாதனை பாகிஸ்தான் அணிக்கு சாத்தியமே.100 ரன்.
பந்து வீச்சிற்க்கு மட்டுமே பெயர் போன பாகிஸ்தான் அணி இப்படி ஒரு பேட்டிங் சாதனை பட்டியளில் இடம் பிடித்துள்ளது ஆச்சர்யம் தான். ஆனல் இந்த சாதனயை தக்க வைத்துக்கொள்ள தற்போது உள்ள வீரர்கள் முனைவார்களா என்பது சந்தேகன் தான்.
3.இலங்கை – 270 100+ பார்ட்னர்சிப்
90களில் திடீரென உதித்த அணி இலங்கை. அப்போது, திடீரென தகுதிச் சுற்றில் விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறி கோப்பையையும் வென்றது இலங்கை அணி.
டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவாக சோபிக்கவில்லை எனினும், ஒருநாள் போட்டிகளை சற்று நன்றாக தான் ஆடி வந்துள்ளனர். அர்ஜுனா ரந்துங்கா, சங்ககாரா, தில்சான், ஜயவர்தனே, ஜெயசூரியா போன்ற திறமையான வீரர்களும் அந்த அனியில் உள்ளனர்.
2.ஆஸ்திரேலியா – 366 100+ பார்ட்னர்சிப்
கிட்டத்ட்ட 20 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் திறமையாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த அணி இது. தொடர்ந்து மூன்று ஒரு நாள் உலக கோப்பையை வென்ற அணி இந்த பட்டியளில் முதல் இடத்தில் இல்லாமல் போனது சற்று ஜீரணிக்க முடியாத விசயம் தான்.
பாண்டிங்க், பெவன், வாக் சகோதரர்கள், கில்கிறிஸ்ட் என மிக அதிக அளவிளான வீரர்களை கொண்ட அணிக்கு இது அசட்டயான சாதனை தான்.
1. இந்தியா – 400 100+ பார்ட்னர்சிப்
பேட்டிங் சாதனை என்றாலே கிட்டத்தட்ட அனைத்து பட்டியளிலும் மிதல் இடடத்தில் இருப்பதது நம் அணி தான். நேற்றய ஆட்டட்த்தில் தோனி-மனீஷ் அடித்த அந்த 100+ பார்ட்னர்சிப் இந்திய அணிக்கு 400ஆவது 100+ பார்ட்னர்சிப் ஆகும்.
சச்சின், சேவாக், ட்ராவிட், கங்குலி, தோனி, கோலி, ரெய்னா, யுவராஜ் சிங் என் இந்திய அணியில் இருப்பவர் அனைவரும் பேட்டிங் ஜாம்பவான்கள் தான்.
400 100+ பார்ட்னர்சிப் என்பது சற்று இமாலாம் தான். பேட்டிங் என்றாலே இந்தியா தான் என்பதற்க்கு இது மற்றுமொரு சான்று.