டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்கு கிடைக்காது.. இந்த இரண்டு அணிகள் இந்தியாவுக்கு பெரிய தொல்லையாக இருக்கும் - முன்னாள் இங்கிலாந்து வீரர் கருத்து! 1

டி20 உலககோப்பையில்  இந்திய அணிக்கு இந்த இரண்டு அணிகளும் மிகப்பெரிய தொல்லையாக இருக்கும் என பேட்டியளித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன்.

டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக 14 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றுவிட்டனர். அவர்களுடன் ரிசர்வ் வீரர்கள் சிலரும் சென்று இருக்கின்றனர். காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகி இருப்பதால் அவருக்கு மாற்று வீரரை விரைவில் அறிவித்தவுடன் அவரும் ஆஸ்திரேலியா செல்வார் என தகவல்கள் வெளியானது

டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்கு கிடைக்காது.. இந்த இரண்டு அணிகள் இந்தியாவுக்கு பெரிய தொல்லையாக இருக்கும் - முன்னாள் இங்கிலாந்து வீரர் கருத்து! 2

டி20 உலக கோப்பைக்கு முன்னோட்டமாக பல அணிகள் வெவ்வேறு அணிகளுடன் டி20 தொடரில் விளையாடுகிறது. அது முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவில் பயிற்சி போட்டிகளிலும் பங்கே இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடர் பல அணிகளுக்கு மிகவும் முக்கியம் என்பதால் அணியின் தேர்வில் கவனம் செலுத்தி வருகின்றனர். கத்துக்குட்டி அணிகளாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளும் மிகப்பெரிய அணிகளை தங்களது செயற்பட்டால் மிரட்டுகின்றன.

இந்நிலையில் இந்த வருடம் டி20 உலககோப்பை எந்த அணி வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என பல்வேறு கணிப்புகள் வெளிவரும் நிலையில் தனது கணிப்பினை தெரிவித்து இருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன். அவர் கூறுகையில்,

டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்கு கிடைக்காது.. இந்த இரண்டு அணிகள் இந்தியாவுக்கு பெரிய தொல்லையாக இருக்கும் - முன்னாள் இங்கிலாந்து வீரர் கருத்து! 3

“இந்த வருடம் உலக கோப்பையில் இந்திய அணிக்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அச்சுறுத்தலாக இருக்கும். டி20 போட்டிகளைப் பொறுத்தவரை யாரேனும் ஒரு வீரர் அன்றைய தினம் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை பெற்று தர வேண்டும். அந்த வகையில் இந்திய அணியில் போதிய அனுபவமிக்க வீரர்கள் இல்லை என்பதால் இந்த கோப்பையை வெல்வதற்கு அவர்கள் அதிக வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

விராட் கோலி அதிகபட்சம் இந்திய அணியை அரை இறுதிப் போட்டிவரை எடுத்துச் செல்வார். அதற்கு முன்னர் நடைபெறும் ஏதேனும் இரண்டு போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்டு அணியை முன்னேற்றுவார். அவர் ஒருவர் மட்டும் நன்றாக விளையாடினால் போதாது. யாரேனும் ஒருவர் 50 பந்துகளில் 100 ரன்கள் அடிக்க வேண்டும். அந்த விதத்தில் இந்திய அணியில் அப்படி ஒரு வீரர் இல்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளில் ஒன்று உலகக்கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இந்திய அணியை அதற்காக புறந்தள்ளி விட முடியாது. அவர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published.