இவர் எங்கள் விராட் கோஹ்லி; மார்தட்டி கொள்ளும் ஆஸ்திரேலிய பயிற்சியாளர்
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தொடர்ச்சி யாக இரு சதங்கள் விளாசிய ஸ்டீவ் ஸ்மித் உலகின் சிறந்த பேட்ஸ் மேனான விராட் கோலிக்கு இணை யாக விளையாடுவதாக ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பர்மிங் காமில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 251 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார் ஸ்டீவ் ஸ்மித். அதிலும் தடை காலத்துக்குப் பிறகு அணிக்கு திரும்பிய நிலையில் வெற்றிக்கான பங்களிப்பு அவரிடம் இருந்து வெளிப் பட்டது அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது: ஸ்டீவ் ஸ்மித் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு சுழற்பந்து வீச்சாளராக தொடங்கினார். அதன் பின்னர் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தன்னை மாற்றிக் கொண்டார். முதலில் அவர் என்னிடம் வரும் போது லெக் ஸ்பின்னராக வந்தார். அதிலும் வழக்கத்துக்கு மாறான பாணியில் பந்து வீசுபவராக இருந்தார்.
அப்போது இவரால் சிறப்பாக செயல்பட முடியுமா என்று என்னால் உறுதியாக கூறமுடியவில்லை. அதன் பிறகு சென்ற அவர், சுழற்பந்து வீச்சாளராக இருக்க விரும்பவில்லை, நான் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

அதன் பின்னர் தன்னை முற்றி லும் மாற்றிக்கொண்டார். விராட் கோலிக்கு இணையாக உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். இந்த புகழ் அவரையே சாரும். கோடை காலத்தின் போது நான் பார்த்ததிலேயே விராட் கோலிதான் சிறந்த பேட்ஸ்மேன் என தெரிவித் தேன். ஆனால் தற்போது பர்மிங்கா மில் ஸ்டீவ் ஸ்மித் விளையாடிய விதம் வேறு ஒரு மட்டத்திலானது. இந்த ஆட்டத்தில் தனது மன வலிமையையும், சிறந்த பண்பு களையும் அவர் அற்புதமாக வெளிக் காட்டினார்” என புகழாரம் சூட்டியுள்ளார்.