தென் ஆப்ரிக்கா அணிக்கு திடீரென குட்பை சொன்ன முக்கிய வீரர்; அதிர்ச்சியில் ரசிகர்கள் !! 1
CAPE TOWN, SOUTH AFRICA - JANUARY 30: Dwaine Pretorius of South Africa and the team celebates after the wicket of Babar Azam of Pakistan during the 5th Momentum One Day International match between South Africa and Pakistan at PPC Newlands on January 30, 2019 in Cape Town, South Africa. (Photo by Thinus Maritz/Gallo Images/Getty Images)

தென் ஆப்ரிக்கா அணிக்கு திடீரென குட்பை சொன்ன முக்கிய வீரர்; அதிர்ச்சியில் ரசிகர்கள்

தென் ஆப்ரிக்கா அணியின் சீனியர் வீரர்களில் முக்கியமானவரான டேல் ஸ்டைன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் டேல் ஸ்டெய்ன் தொடர்ந்து விளையாடுவார்.

தென் ஆப்ரிக்கா அணிக்கு திடீரென குட்பை சொன்ன முக்கிய வீரர்; அதிர்ச்சியில் ரசிகர்கள் !! 2

“இன்று நான் அதிகம் விரும்பக்கூடிய ஒரு வடிவத்திலிருந்து நிரந்தரமாக விலகும் முடிவை எடுத்துள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்தான் சிறந்தது, ஏனெனில் அது உங்கள் மனம், உடல் அளவில் மட்டுமல்லாது உணர்வு ரீதியாகவும் சவாலளிக்கக் கூடியது. இன்னொரு டெஸ்ட் போட்டியில் நான் ஆடப்போவதில்லை என்ற முடிவு பயங்கரமானதுதான். ஆனால் இதை விடவும் அச்சுறுத்துவது ‘இனி விளையாடவே முடியாது’ என்பதுதான். ஆகவே டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெறுவது அவசியம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். ஆகவே டி20, ஒருநாள் தொடர்களில் ஆடி என் ஆரோக்கியத்தை பராமரித்து இந்த வடிவங்களில் முழு ஆற்றலுடன் ஆட முடிவு செய்துள்ளேன்” என்றார்.

தென் ஆப்ரிக்கா அணிக்கு திடீரென குட்பை சொன்ன முக்கிய வீரர்; அதிர்ச்சியில் ரசிகர்கள் !! 3
CAPE TOWN, SOUTH AFRICA – JANUARY 30: Dwaine Pretorius of South Africa and the team celebates after the wicket of Babar Azam of Pakistan during the 5th Momentum One Day International match between South Africa and Pakistan at PPC Newlands on January 30, 2019 in Cape Town, South Africa. (Photo by Thinus Maritz/Gallo Images/Getty Images)

டேல் ஸ்டெய்ன் இங்கிலாந்துக்கு எதிராக 2004-ல் டெஸ்ட்டில் அறிமுகமானார். 93 டெஸ்ட் போட்டிகளில் 439 விக்கெட்டுகளை அவர் 22.95 என்ற சராசரியில் கைப்பற்றியுள்ளார். 26 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் சாதனையை 5 முறையும் நிகழ்த்தியுள்ளார் ஸ்டெய்ன்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *