விக்கெட்டுகள் மழை பொழிந்த ஸ்டூவர்ட் பிராட் புதிய சாதனை! 1

மான்செஸ்டர் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் பிராத்வைட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500-வது விக்கெட்டுகள் வீழ்த்தி ஸ்டூவர்ட் பிராட் சாதனைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக ஜேம்ஸ் ஆண்டர்கன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் ஸ்டூவர்ட் பிராட் நீக்கப்பட்டார். இதனால் கடும் விமர்சனம் எழும்பியது. இங்கிலாந்து அணியும் தோல்வியடைந்தது.

விக்கெட்டுகள் மழை பொழிந்த ஸ்டூவர்ட் பிராட் புதிய சாதனை! 2
MANCHESTER, ENGLAND – JULY 28: Stuart Broad of England celebrates after taking the wicket of Kraigg Brathwaite of West Indies for his 500th Test Wicket during Day Five of the Ruth Strauss Foundation Test, the Third Test in the 

இதனால் 2-வது போட்டியில் சேர்க்கப்பட்டார். ஸ்டூவர்ட் பிராட் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இவரின் சிறப்பான பந்து வீச்சு மற்றும் பென் ஸ்டோக்ஸ்-ன் பேட்டிங்காலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஸ்டூவர்ட் பிராட் ஆறு விக்கெட் வீழ்த்தினார். 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். நேற்றைய 4-வது நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.விக்கெட்டுகள் மழை பொழிந்த ஸ்டூவர்ட் பிராட் புதிய சாதனை! 3

இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் கிரேக் பிராத்வைட் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்த விக்கெட் மூலம் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்தார். ஏற்கனவே ஜேம்ஸ் ஆண்டர்சன் 500 விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றிருந்தார். தற்போது ஸ்டூவர்ட் பிராட் 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் 129 டெஸ்டில் இந்த சாதனையை எட்டிய நிலையில் ஸ்டூவர்ட் பிராட் 140 போட்டியில் எட்டியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *