பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் ஸ்டுவர்ட் லா!! 1

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டுவர்ட் லா தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான இவர் கரீபியன் கிரிக்கெட்டில் தற்போது பயிற்சியாளராக விளங்குகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இருந்து வெற்றியோ தோல்வியோ பெற்ற பின்னர் பயிற்சியாளர் பதவியில் இருந்து முழுவதுமாக ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த பணியில் சேர்ந்த அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியை டெஸ்ட் போட்டிகளில் மிகவும் தரம் உயர்த்தி உள்ளார். இவரது தலைமையின் கீழ் வங்கதேச அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற.து அதனைத் தாண்டி கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியை வென்றது இந்த அணி. இதுவும் இவரது தலைமையின் கீழ் நடைபெற்றதாகும்.பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் ஸ்டுவர்ட் லா!! 2

ஆனால் ஒருநாள் தொடரில் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் கலந்துகொண்டு உலக கோப்பை தொடருக்கு தகுதியானது வெஸ்ட் இண்டீஸ் அணி. இது இவரது தலைமையை குற்றம் சொல்ல ஏதுவாக அமைந்தது. அதனைத் தாண்டி சென்ற வருடம் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்த அணி தகுதி பெறவில்லை. இதனால் இவரது தலைமை விமர்சிக்கப்பட்டது.

தற்போது வரை இவர்வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் பயிற்சியாளராக இருந்துள்ளார். 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளா. 19 டி20 போட்டிகளில் இவரது தலைமையில் நடைபெற்றது. அதில் 8 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியதாவது..

பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் ஸ்டுவர்ட் லா!! 3

இந்த கடினமான முடிவை நான் எடுக்க வேண்டியதாக உள்ளது. தற்போது வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணியை விட்டு நான் வெளியேற வேண்டும். இவர்களுடன் இருந்த கடந்த ஒன்றரை வருடம் எனக்கு மிக நல்ல அனுபவமாக அமைந்தது. மேலும் அணியை நான் பெரும் முயற்சி கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி உள்ளேன் என்று நினைக்கிறேன். வெளியேறுவது எனக்கு கடினமாக தான் உள்ளது தலைமை பண்பை நான் இந்த அணியில் வளர்த்துள்ளேன் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் அவர்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் அட்டவணை :

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட் அக்டோபர் 4-8 வரை – ராஜ்கோட்

இரண்டாவது டெஸ்ட் – அக்டோபர் 12-16 வரை ஹைதராபாத்

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள் போட்டி – அக்டோபர் 21 – கவ்ஹாத்தி

இரண்டாவது ஒருநாள் போட்டி – அக்டோபர் 24 – இன்டோர்

மூன்றாவது ஒருநாள் போட்டி – அக்டோபர் 27 – புனே

நான்காவது ஒருநாள் போட்டி – அக்டோபர் 29 – மும்பை

ஐந்தாவது ஒருநாள் போட்டி – நவம்பர் 1 – திருவனந்தபுரம்

டி20 தொடர்

முதல் டி20 – நவம்பர் 4 – கொல்கத்தா

இரண்டாவது டி20 – நவம்பர் 6 – லக்னோ

மூன்றாவது டி20 – நவம்பர் 11 – சென்னை

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *