விராட் கோலி கிரிக்கெட் விளையாடினாலும் அவருக்கு மிக பிடித்த ஒரு விளையாட்டு ஃபுட்பால் என்பது இந்தியன் சூப்பர் லீக் ஃபுட்பால் தொடரில் கோவைக்கு அவரும் ஒரு உரிமையாளர் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
விராட் கோலி சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் பாலை எட்டி உதைத்ததும் அந்த பந்து நேராக சென்று கோல் போஸ்ட் கம்பத்தில் பட்டது.
அதற்கு தற்செயலாக நடந்த கிராஸ் பார் சேலஞ்ச் என்று பெயரிட்டு அந்த வீடியோவை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார் விராட் கோலி.
Accidental crossbar challenge 😂 pic.twitter.com/koeSSKGQeb
— Virat Kohli (@imVkohli) May 25, 2021
அந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிக அளவில் பரப்பப்பட்டு வந்தது. பல ரசிகர்கள் அவரது கால்பந்து திறமையைக் கண்டு அசந்து போயினர்.
ஒரே தவணையில் கட்டுகிறீர்கள் அல்லது பிரித்து பிரித்து கட்டுகிறீர்களா
அதனைக் கண்ட இந்திய கால்பந்து நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி, மிக அற்புதமாக கிக் செய்து உள்ளீர்கள். நாம் முன்பே பேசியபடி நான் உங்களுக்குக் கொடுத்த பயிற்சிகளுக்கு முழு தவணையாக பணத்தை கட்ட போகிறீர்களா அல்லது இன்ஸ்டால் மெண்டில் தனித்தனியாக பணத்தை கட்ட போகிறீர்களா என்று நகைச்சுவையாக கேட்டுள்ளார்.
Saare coaching sessions ka ek hi invoice bheju, ya aasan kishton mein chukaoge, champ? 😉 https://t.co/i98I9a9Nmq
— Sunil Chhetri (@chetrisunil11) May 25, 2021
சுனில் சேத்ரி பதிவிட்ட அந்த கமெண்ட்டை பார்த்து பதிலுக்கு விராட்கோலி கண்டிப்பாக கட்டிவிடுகிறேன் என்று பதிலுக்கு நகைச்சுவையாக தனது பதிலை பதிவிட்டிருந்தார்.
தற்பொழுது விராட் கோலி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி வருகிற ஜூன் 18-ம் தேதி நியூஸிலாந்து அணிக்கு எதிராக உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.