சாஹல் மற்றும் குல்தீப் யாதவின் தேவை இந்திய அணிக்கு நிச்சயம் தேவை; கவாஸ்கர்
சாஹல் மற்றும் குல்தீப் யாதவின் கூட்டண் இந்திய அணிக்கு இன்னும் நிறைய வெற்றிகளை பெற்று கொடுக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், அதற்கு அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கிலும், டி.20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்தது.
இதில் ஒருநாள் தொடர்களில் இந்திய அணிக்கு, குல்தீப் யாதவும், சாஹலும் தங்களது அபார பந்துவீச்சு மூலம் கை கொடுத்தனர். இரண்டு பேரும் சேர்ந்து மொத்தம் 33 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன் பின் நடைபெற்ற டி.20 தொடரில் இருந்து குல்தீப் யாதவ் காயம் காரணமாக விலகினார். இந்த தொடரில் சாஹலின் பந்துவீச்சும் எடுபடவில்லை. குறிப்பாக இரண்டாவது டி.20 போட்டியில் இந்திய அணி தோல்விக்கு சாஹலின் மோசமான பந்துவீச்சே காரணமாக அமைந்தது. அந்த போட்டியில் சாஹல் வீசிய நான்கு ஓவர்களில் தென் ஆப்ரிக்கா வீரர்கள் அசால்டாக 64 ரன்கள் குவித்தனர்.
இதனால் சாஹலை பலரும் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கவாஸ்கர் சாஹல் மற்றும் குல்தீப் யாதவிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இது குறித்து கவாஸ்கர் கூறியதாவது “ ஒரு சில போட்டிகளில் சொதப்பிதை காரணமாக வைத்து கொண்டு, ஒரு வீரரை ஓரங்கட்டுவது சரியானது அல்ல, சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் கூட்டணி இந்திய அணிக்கு இன்னும் நிறைய போட்டிகளில் வெற்றியை பெற்று கொடுக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.