நான் அப்படி சொன்னதுக்கு இம்ரான் கான் தான் காரணம்; உண்மையை உடைத்த சுனில் கவாஸ்கர் !! 1

நான் அப்படி சொன்னதுக்கு இம்ரான் கான் தான் காரணம்; உண்மையை உடைத்த சுனில் கவாஸ்கர்

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது ஓய்வு முடிவு குறித்து பாகிஸ்தான் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் உடன் பகிர்ந்து கொண்டதை தெரிவித்துள்ளார்.

சமீப காலமாகவே இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகிறார். அந்தவகையில் நேற்று இந்திய கேப்டனாக விராட் கோலி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு தனது அதிருப்தியை பதிவு செய்தார். இந்நிலையில் அவர்  ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தளத்திற்கு ஒரு விரிவான பேட்டியை அளித்துள்ளார். அதில் இந்திய அணி குறித்தும் தனது ஓய்வு முடிவு குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

நான் அப்படி சொன்னதுக்கு இம்ரான் கான் தான் காரணம்; உண்மையை உடைத்த சுனில் கவாஸ்கர் !! 2

இதுபற்றி சுனில் கவாஸ்கர், “1986ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது நானும் இம்ரான் கானும் மதிய உணவு சாப்பிட சென்றோம். அந்தச் சமயத்தில் நான் இந்தத் தொடருடன் ஓய்வு முடிவை அறிவிக்க போகிறேன் என்று இம்ரான் கானிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் இப்போது நீங்கள் ஓய்வை அறிவிக்காதீர்கள் என்று கூறினார்.

ஏனென்றால் அடுத்து பாகிஸ்தான் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. ஆகவே அங்கு வந்து இந்தியாவை தோற்கடிப்பதே எனது எண்ணம். அப்போது இந்திய அணியில் நீங்கள் இல்லையென்றால் நன்றாக இருக்காது என்று கூறினார். அதற்கு நான் இங்கிலாந்து தொடர் முடிவில் பாகிஸ்தான் தொடரின் அறிவிப்பு வரவில்லை என்றால் நான் எனது ஓய்வை அறிவித்துவிடுவேன் எனப் பதிலளித்தேன். எனினும் இதற்கு அடுத்த நாளே பாகிஸ்தான் தொடரின் அறிவிப்பு வெளி வந்ததால் நான் எனது ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்திய அணியின் உலகக் கோப்பை தொடர் செயல்பாடு குறித்து கவாஸ்கர், “உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங் 3ஆவது இடத்துடன் முடிந்தது. ஆகவே இந்த மூவரும் ரன் எடுக்கவில்லை என்றால் இந்திய அணி தடுமாறும். அந்த நிலைதான் உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில் நடந்தது” எனக் கூறியுள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *