நான் ஏன் ஹெல்மெட் அணிவதில்லை - கவாஸ்கர் 1

80களில் டெஸ்ட் கிரிக்கெட்டின் அசைக்க முடியாத வீரராக திகழ்ந்த கவாஸ்கர், கிரிக்கெட் விளையாட்டை மாற்றியமைத்து தன்னனே தனி பாணி அமைத்து ஜென்டில்மேன் விளையாட்டாக மாற்றினார். தனது நேர்த்தியான மற்றும் அதிரடியான ஆட்டத்தினால் பந்துவீச்சாளர்கள் தலையை பிய்த்துக்கொள்ள வைப்பவர் கவாஸ்கர்.

இன்னொரு காரியத்திற்க்காக ஜாம்பவான் கவாஸ்கர் பாராட்டப்பட்டார் என்றால் அது இவர் களத்தில் இவர் எப்போதும் ஹெல்மெட் அணியாததற்கு தான். ஹெல்மெட் அணியவில்லை என்றால் பாதிப்பு தானே இதில் பாராட்ட என்ன இருக்கு என்று நீங்கள் கேட்கலாம்.

Sunil Gavaskar

ஏனெனில், இவர் பேட்டிங் செய்த காலத்தில் தான் மைக்கேல் ஹோல்ட்டிங், சர் ஆண்டி ரொபேர்ட்ஸ், மால்கம் மார்ஷல், சர் ரிச்சர்ட் ஹட்லீ போன்ற பந்துவீச்சாளர்களும் இருந்தனர். இது போதாதா இவரின் இந்த செயலை பாராட்ட.

கவ்ரவ் கபூரின் நிகழ்ச்சியில் நான் ஏன் ஹெல்மெட் அணிவதில்லை? என்ற கேள்விக்கு பதிலளித்தார். இதற்க்கு கிண்டலாக “என் தலையில் தான் எதுமே இல்லை பாதுகாத்துக்கொள்ள” என்றார்

இம்ரான் கான் எப்போதுமே ஹெல்மெட் அணிய சொல்லி பரிந்துரைப்பார்

நான் ஏன் ஹெல்மெட் அணிவதில்லை - கவாஸ்கர் 2

கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் ஒருவரையொருவர் எதிரிகளாக பார்த்துக்கொண்டாலும், மைதானத்துக்கு வெளியே நல்ல நட்பு வட்டாரத்தில் தான் பயணிக்கிறார்கள். பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஜாம்பவானான இம்ரான் கான், எப்போதும் தன்னை ஹெல்மெட் அணிந்துகொள்ள சொல்லி பரிந்துரைப்பார் என கூறினார் கவாஸ்கர்.

“நன் எப்போதும் ஹெல்மெட் பற்றி யோசிப்பதே இல்லை, இம்ரான் கான் அடிக்கடி எனக்கு அணிந்துகொள்ள சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் எப்போதும் கிட் பேக்கில் ஹெல்மெட் இருந்துகொண்டே தான் இருக்கும். ஆனால் நான் தான் அதை உபயோகிப்பதே இல்லை என்றார்.

ஒருமுறை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஜாம்பவான் மால்கம் மார்ஷல் வீசிய பந்து ஒருமுறை தன் தலையை பதம் பார்த்ததாகவும், அதன் பின் தொடர்ந்து வலியுறுத்தலின் பெயரால் ஹெல்மெட் அணிந்துகொண்டு தான் விளையாடி வந்ததாகவும் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *