நமக்கு அதெல்லாம் சுத்தமா செட் ஆகாது; மிகப்பெரும் ரகசியத்தை வெளிப்படுத்திய சுனில் கவாஸ்கர் !! 1

தன்னுடன் விளையாடிய பல வீரர்கள் தற்போது பயிற்சியாளர்களாக இருக்கும் போதிலும் தான் இன்னும் பயிற்சியாளர் அவதாரம் எடுக்காததற்கான காரணம் என்ன என்பதை சுனில் கவாஸ்கரே ஓபனாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட், அணில் கும்ப்ளே போன்ற முன்னாள் வீரர்கள் ஐபிஎல் தொடர், சர்வதேச தொடர் ஆகியவற்றில் பயிற்சியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்திய அணியை மிகசிறப்பாக வழிநடத்தி வருவதாக பல முன்னாள் வீரர்களால் பாராட்டப்பட்டு வருகிறார். அதே போல் மறுபுறம் இந்திய இளம் அணியை மிக திறமையாக உருவாக்கி வரும் ராகுல் டிராவிட், இந்திய அணிக்கு பல சிறந்த வீரர்களையும் கொடுத்து வருகிறார்.

நமக்கு அதெல்லாம் சுத்தமா செட் ஆகாது; மிகப்பெரும் ரகசியத்தை வெளிப்படுத்திய சுனில் கவாஸ்கர் !! 2

ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே போன்ற வீரர்கள் எல்லாம் கூட பயிற்சியாளர்கள் அவதாரம் எடுத்துவிட்டாலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கரோ இதுவரை ஒரு முறை கூட எந்த அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட்டது இல்லை, கிரிக்கெட் வர்ணனையாளராகவே செயல்பட்டு வருகிறார்.

இந்தநிலையில், இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சுனில் கவாஸ்கரே தற்போது ஓபனாக பதிலளித்துள்ளார்.

நமக்கு அதெல்லாம் சுத்தமா செட் ஆகாது; மிகப்பெரும் ரகசியத்தை வெளிப்படுத்திய சுனில் கவாஸ்கர் !! 3

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “நான் ஒரு பந்து கூட இடைவிடாமல் ஆட்டத்தின் அனைத்து பந்துகளையும் பார்க்கும் நபர் கிடையாது. நான் ஆடிய காலத்தில் கூட, அவுட்டாகிவிட்டால் சிறிது நேரம் மேட்ச் பார்த்துவிட்டு டிரெஸிங் ரூமிற்கு சென்று புத்தகம் படிப்பது, கடிதங்களுக்கு பதில் எழுதுவது ஆகிய பணிகளை செய்துவிட்டு மீண்டும் வந்து கொஞ்சம் பார்ப்பேன். ஒவ்வொரு பந்தையும் பார்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது. பயிற்சியாளர் ஒவ்வொருந்த பந்தையும் பார்த்தாக வேண்டும். எனவே அதுகுறித்து நான் யோசித்துக்கூட பார்த்தது கிடையாது” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *