ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டர் கிடையாது – சுனில் கவாஸ்கர் காட்டம் 1

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையேயான டி20தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதன்படி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. நாட்டிங்காம் டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டர் கிடையாது – சுனில் கவாஸ்கர் காட்டம் 2

இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுதாம்டனில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களும், இந்திய அணி 273 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் 271 ரன்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இந்திய அணிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதிகபட்சமாக விராட் கோலி 58 ரன்களும், ரஹானே 51 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 184 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டர் கிடையாது – சுனில் கவாஸ்கர் காட்டம் 3

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விரும்பிய தொடக்கம் கிடைக்கவில்லை என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையேயான டி20தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதன்படி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 3-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுதாம்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதோடு, டெஸ்ட் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டர் கிடையாது – சுனில் கவாஸ்கர் காட்டம் 4

இந்த தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த டெஸ்டில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருப்பதாக முந்தைய நாள் இரவில் நினைத்தேன். ஆனால் நாங்கள் விரும்பிய மாதிரி தொடக்கம் கிடைக்கவில்லை. பந்து வீச்சில் இங்கிலாந்து அணியினர் எங்களுக்கு தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தனர். இதனால் எல்லா பெருமையும் இங்கிலாந்து வீரர்களையே சாரும். கடினமான சூழலில் எங்களை விட அவர்கள் துணிச்சலாக செயல்பட்டனர். 2-வது இன்னிங்சில் அவர்களின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. இதனால் வெற்றி இங்கிலாந்து அணியின் வசமானது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *