இவரு உங்க டீம்ல இருக்குற வரைக்கும் நீங்க ஜெய்க்க மாட்டிங்க ! கொல்கத்தா வீரரை வருத்தெடுத்த சுனில் கவாஸ்கர் ! 1

இவரு உங்க டீம்ல இருக்குற வரைக்கும் நீங்க ஜெய்க்க மாட்டிங்க ! கொல்கத்தா வீரரை வருத்தெடுத்த சுனில் கவாஸ்கர் !

14வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 25 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பெங்களூர் அணிகள் 8 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்து இடத்தில் இருக்கிறது. 

இவரு உங்க டீம்ல இருக்குற வரைக்கும் நீங்க ஜெய்க்க மாட்டிங்க ! கொல்கத்தா வீரரை வருத்தெடுத்த சுனில் கவாஸ்கர் ! 2

இந்நிலையில்,இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தற்போது மோசமான நிலையில் இருக்கிறது. இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியது.

இதன்பிறகு மும்பை, பெங்களூர், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுடன் தொடர்ந்து 4 தோல்வியை சந்தித்தது. இதன்பிறகு கம்பேக் கொடுத்த கொல்கத்தா அணி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி டெல்லி அணியை எதிர்கொண்டது. இதிலும் கொல்கத்தா தோல்வி அடைந்ததால் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. 

இவரு உங்க டீம்ல இருக்குற வரைக்கும் நீங்க ஜெய்க்க மாட்டிங்க ! கொல்கத்தா வீரரை வருத்தெடுத்த சுனில் கவாஸ்கர் ! 3

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தோல்விக்கான காரணத்தை பலரும் சுட்டி காட்டி வருகின்றனர். அந்தவகையில் தற்போது இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்த கொல்கத்தா வீரரை வெளியேறினால் நீங்கள் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்று கூறுயுள்ளார்.

அவர் கூறுகையில் “கொல்கத்தா அணி தங்களது பேட்டிங் ஆர்டரில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். சுப்மன் கில், ராணா, தினேஷ் கார்த்திக், ரஸல், மோர்கன் போன்ற நட்சத்திர வீரர்களை வைத்தும் வெற்றி பெறவில்லை என்றால் தவறு உங்களிடம் தான் இருக்கிறது.

இவரு உங்க டீம்ல இருக்குற வரைக்கும் நீங்க ஜெய்க்க மாட்டிங்க ! கொல்கத்தா வீரரை வருத்தெடுத்த சுனில் கவாஸ்கர் ! 4

ஆனால் மிடில் ஆர்டரில் சுனில் நரேனை ஏன் களமிறக்குகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவர் சிறந்த பேட்ஸ்மனா என்று எனக்கு புரியவில்லை. இவரது வீக்னஸை அனைத்து அணிகளும் கண்டுபிடித்து விட்டது.

இவரை வெளியேற்றிவிட்டு சிறந்த பேட்ஸ்மன் யாராவது தேர்வு செய்து கொல்கத்தா விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும்” என்று சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார். கொல்கத்தா அணி அடுத்ததாக பெங்களூர் அணியுடன் இரண்டாவது முறையாக விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *