ஜிம்பாவே அணியை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது கடந்த வாரம் சுற்றுப்பயணம் செய்து ஜிம்பாப்வே அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ஒருநாள் போட்டிகளில் முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ராவல்பிண்டி மைதானத்தில் நேற்று நடைபெற்றது

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஜிம்பாப்வே அணியின் பேட்டிங் சற்று மோசமாகத்தான் இருந்தது 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து விட்டதை அடுத்து இறங்கிய பிரன்டன் டெய்லர் மற்றும் சீன் வில்லியம்ஸ் நிதானமாக ஆடினார். பிரன்டன் டெய்லர் அரைசதம் அடிக்க சீன் வில்லியம்சன் 56 ரன் எடுத்தார் அதன் பின்னர் வந்த சிக்கண்டர் ரசா 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணியின் முகம்மது உசைன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் இதனையடுத்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி பெரிதாக இருக்கவில்லை தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதம் அடித்து அசத்தினார்

மற்ற வீரர்கள் சரியாக ஓடாததால் 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது இதன் மூலம் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டை இழந்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தது அதனை அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 5 ரன்கள் எடுத்த இந்த போட்டியில் வெற்றி பெற்றது இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஏழாம் தேதி துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது