டி.20 அரங்கில் புதிய சரித்திர சாதனை படைத்தா ஷாகிப் அல் ஹசன் !! 1

டி.20 அரங்கில் புதிய சரித்திர சாதனை படைத்தா ஷாகிப் அல் ஹசன்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரரான ஷகிப் அல் ஹசன், டி20 போட்டிகளில் 4000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்கள் ஆகியவற்றை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

டி.20 அரங்கில் புதிய சரித்திர சாதனை படைத்தா ஷாகிப் அல் ஹசன் !! 2
Shakib achieved the feat with the wicket of Rohit Sharma in the Sunrisers Hyderabad victory against the Mumbai Indians in Tuesday night’s IPL clash.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய மும்பை அணி, ஐதராபாத் அணி வீரர்களின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 87 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் ஷகிப் அல் ஹசன் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் டி20 போட்டிகளில் 300 விக்கெட்களை அவர் கடந்தார். மொத்தம் 260 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 4069 ரன்கள் எடுத்துள்ளார்.

டி.20 அரங்கில் புதிய சரித்திர சாதனை படைத்தா ஷாகிப் அல் ஹசன் !! 3
Bangladesh allrounder Shakib al Hasan has become just the second person in history to reach the Twenty20 milestone of 4,000 runs and 300 wickets.

இதனால் டி20 போட்டிகளில் 4000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்கள் ஆகிய மைல்கற்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ஷகிப் அல் ஹசன் படைத்துள்ளார். முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ, 380 டி20 போட்டிகளில் விளையாடி 5607 ரன்களும், 417 விக்கெட்களும் எடுத்து அந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

டி20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் வெய்ன் பிராவோ (417), லசித் மலிங்கா (348), சுனில் நரேன் (325), ஷாகித் அப்ரிடி (300), ஷகிப் அல் ஹசன் (300) ஆகியோர் உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *