யுவராஜ் சிங் இல்லை... 2011 உலகக்கோப்பையை வெல்ல இவர் தான் முக்கிய காரணம்; சுரேஷ் ரெய்னா சொல்கிறார் !! 1

யுவராஜ் சிங் இல்லை… 2011 உலகக்கோப்பையை வெல்ல இவர் தான் முக்கிய காரணம்; சுரேஷ் ரெய்னா சொல்கிறார்

கடந்த 2011 இல் இந்திய கிரிக்கெட் அணி சுமார் 28 ஆண்டுக்கு பின் 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் கடைசி உலகக்கோப்பை தொடர் என்பதால் ரசிகர்கள் அவருக்கு உலகக்கோப்பை பரிசாக வழங்க வேண்டும் என ஆர்வமாக இருந்தனர்.

யுவராஜ் சிங் இல்லை... 2011 உலகக்கோப்பையை வெல்ல இவர் தான் முக்கிய காரணம்; சுரேஷ் ரெய்னா சொல்கிறார் !! 2

இந்நிலையில், கடந்த 2011 இல் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வெல்ல ஒரே ஒருத்தர் தான் காரணம் என இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரெய்னா கூறுகையில், “சச்சின் உடன் இருக்கும் போது எல்லாம் சாத்தியம் தான். எல்லாம் அவரின் அமைதி தான். சச்சினால் தான் உலகக்கோப்பையை கைப்பற்றினோம்.

 

அவர் ஒருத்தர் தான் டீமில் உள்ள அனைவருக்கும் நம்பிக்கை அளித்தார். மேலும் சொல்லப்போனால், அவர் இந்திய அணியின் இரண்டாவது பயிற்சியாளர் போல இருந்தார்” என்றார்.

யுவராஜ் சிங் இல்லை... 2011 உலகக்கோப்பையை வெல்ல இவர் தான் முக்கிய காரணம்; சுரேஷ் ரெய்னா சொல்கிறார் !! 3

2011 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சச்சின் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் இரண்டாவது இடம் பிடித்தார். இவர் 9 போட்டிகளில் 482 ரன்கள் அடித்தார். ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் ஆல் ரவுண்டராக அசத்த, இந்திய அணி கோப்பை வெல்ல பெரிதும் கைகொடுத்தார். இதில் தொடர் நாயகன் விருதை யுவராஜ் வென்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *