இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் இடம் பிடிக்க திணறி வருகிறார் என்று அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். விரேந்தர் சேவாக்கின் பிறந்த நாள் அன்று அவருக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து கூறியபோது, தொடர்ந்து கடினமாக உழை என ரெய்னாவுக்கு ஆலோசனை கூறினார் சேவாக்.
ஒரு காலத்தில் இந்திய அணியின் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா தற்போது இந்திய அணியிலேயே இல்லை. கடைசியாக அவர் அக்டோபர் 2015ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டியில் விளையாடினார், அதன் பிறகு தேர்வாளர்கள் ஞாபகத்தில் சுரேஷ் ரெய்னா இல்லை.
ஆனால், 2016 இல் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அவரை அழைத்தார்கள், ஆனால் உடல் நலம் சரியில்லாததால் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அதன் பிறகு இங்கிலாந்துடன் டி20 தொடரில் விளையாடிய, அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்டு மூன்று போட்டிகளில் 104 ரன் அடித்தார். அதன் பிறகு, இந்தியன் பிரீமியர் லீக்கில் 14 போட்டிகளில் 442 ரன் அடித்தார், இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தேர்வாவார் என்று நினைத்தார்கள்.
ஆனால், சாம்பியன்ஸ் டிராபியில் தொடரில் தேர்வாகாத ரெய்னா யோ-யோ டெஸ்டில் பெய்ல் ஆனதால், இலங்கை, ஆஸ்திரேலிய தொடரிலும் விளையாடவில்லை. அவருடன் சேர்ந்து யுவராஜ் சிங்கும் யோ-யோ தேர்வில் பெய்ல் ஆனார் என தகவல் வந்தது. அணியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும், தன்னுடைய கடின உழைப்பை ரெய்னா விடவில்லை.
இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்கவீரர் சேவாக்கின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய போது, சுரேஷ் ரெய்னாவை ஊக்குவித்தார் விரேந்தர் சேவாக்.
அதற்கு,“கடின உழைப்பை விடாதே, உனக்கும் ஒரு காலம் வரும்,” என சேவாக் பதில் அளித்தார்.