சும்மா எதாவது பேசாதீங்க... சுரேஷ் ரெய்னா எங்க லிஸ்ட்லையே இல்ல; சின்ன தல ரசிகர்களை வெறுப்பேற்றிய குஜராத் அணி !! 1

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜேசன் ராய்க்கு பதிலாக சுரேஷ் ரெய்னாவை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என குஜராத் டைட்டன்ஸ் அணி அறிவித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரின் கிங்காக திகழ்ந்து வருவதற்கு, தோனியை போன்று சுரேஷ் ரெய்னாவும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது. தோனிக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாக திகழ்ந்து வந்த சுரேஷ் ரெய்னாவின் தொடர் சொதப்பல் ஆட்டத்தால், கடந்த வருட தொடரின் இறுதி கட்டத்தில் அவர் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா விடுவிக்கப்பட்டார்.

சும்மா எதாவது பேசாதீங்க... சுரேஷ் ரெய்னா எங்க லிஸ்ட்லையே இல்ல; சின்ன தல ரசிகர்களை வெறுப்பேற்றிய குஜராத் அணி !! 2

சுரேஷ் ரெய்னாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்காததையே ஏற்றுகொள்ளாத அவரது ரசிகர்கள், சென்னை அணியை கடுமையாக விமர்சித்தனர். இருந்தாலும், எப்படியாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை எடுத்துவிடும் என்றே அனைவரும் காத்திருந்தனர், ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட எந்த அணியும் சுரேஷ் ரெய்னாவை அவரது அடிப்படை விலை கொடுத்து கூட வாங்க முன்வரவில்லை. இதனால் செம கடுப்பான சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சமூக வலைதளங்களில் இன்று வரை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடர் இந்த மாத இறுதியில் துவங்க உள்ள நிலையில், வீரர்கள் யாராவது விலகி அவர்களுக்கு பதிலாக சுரேஷ் ரெய்னாவை எந்த அணியாவது எடுத்து கொள்ளாதா என சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்கள் வேதனையுடன் காத்துள்ளனர்.

சும்மா எதாவது பேசாதீங்க... சுரேஷ் ரெய்னா எங்க லிஸ்ட்லையே இல்ல; சின்ன தல ரசிகர்களை வெறுப்பேற்றிய குஜராத் அணி !! 3

இந்த நிலையில் புதிதாக ஐபிஎல் கிரிக்கெட்டில் என்ட்ரி கொடுத்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயை ஏலத்தில் எடுத்திருந்தது. தற்போது பயோ பபூள் அசவுகரியங்களால் விலகுவதாக ராய் அறிவித்துள்ளார். அதனால் அவருக்கு மாற்று வீரராக குஜராத் டைட்டன்ஸ் அணி ரெய்னாவை பிக் செய்யுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். முன்னதாக ரெய்னா 2016 மற்றும் 2017 சீசன்களில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். அதனால் அவரை பிக் செய்ய வேண்டுமெனவும் ரசிகர்கள் சொல்லியிருந்தனர். ஆனால் ரசிகர்களின் கோரிக்கையை குஜராத் டைட்டன்ஸ் அணி கிட்டத்தட்ட நிராகரித்துள்ளதாகவே தெரிகிறது. அப்படி தான் நமக்கு இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

சும்மா எதாவது பேசாதீங்க... சுரேஷ் ரெய்னா எங்க லிஸ்ட்லையே இல்ல; சின்ன தல ரசிகர்களை வெறுப்பேற்றிய குஜராத் அணி !! 4

ஜேசன் ராய் ஒரு தொடக்க ஆட்டக்காரர். அதனால் ரெய்னாவை ராய்க்கு மாற்று வீரராக சேர்ப்பது குறித்து குஜராத் அணி அறவே பரிசீலிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் இருந்து வெளியாகியுள்ள இந்த தகவல், சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்களை மேலும் வெறுப்பேற்றியுள்ளது. சென்னை அணியுடன் சேர்த்து தற்போது குஜராத் அணியையும், ரெய்னாவின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *