தன் பழைய நினைவுகளை பற்றி சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தில் கூறியுள்ளர்

இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா தற்போது அவர் மனைவியுடன் தன் நெதர்லாந்தில் தன் நேரத்தை செலவிடுகிறார்.அங்கு இவர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

நெதர்லாந்தில் சுரேஷ் ரெய்னா இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆன கேரி கிர்ஸ்டனை சந்தித்தார்.கேரி கிர்ஸ்டன் நெதர்லாந்தில் தற்போது U-19 நெதர்லாந்து அணிக்கு பயிற்சியளித்து வருகிறார்.

கேரி கிர்ஸ்டன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த போது தான் இந்திய அணி 28 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை 2011ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது.

தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரெய்னா :

நீண்ட நாள்களுக்கு பிறகு சுரேஷ் ரெய்னா அவரை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

ட்விட்டர் பக்கத்தில் தான் மகிழ்ச்சியை தெரிவித்த ரெய்னா :

சுரேஷ் ரெய்னா இந்தியா அணியில் இடம் பிடித்து இதுவரை இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது,இதற்க்கு முன்னாள் சுரேஷ் ரெய்னா 2015இல் நியூஸிலாந்து உடன் நடந்த ஒரு நாள் போட்டியில் விளையாடினார் அதற்கு பின்னால் சுரேஷ் ரெய்னாவிற்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.

சுரேஷ் ரெய்னா நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார் இந்த முறை நடந்து முடிந்த 10வது ஐபிஎல் போட்டிகளில் 14 போட்டிகள் விளையாடி 442 ரன்கள் எடுத்து முன்னிலையில் இருந்தார்.

ஆனாலும் கூட இவருக்கு இந்தியா அணியில் விளையாடும் வாய்ப்பு இன்னும் கிடைக்காமல் இந்திய அணியில் விளையாட தொடர்ந்து காத்து கொண்டே இருக்கிறார்.

இனி வரும் போட்டிகளில் இந்திய அணியை சேர்ந்த சுரேஷ் ரெய்னாவிற்கு வாய்ப்பு கிடைக்கின்றதா என்று நாம் அனைவரும் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

 

 

 

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.