எல்லாம் போதும்டா... அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் திடீரென ஓய்வை அறிவித்த சின்ன தல சுரேஷ் ரெய்னா !! 1

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போன்ற உள்ளூர் போட்டிகளில் இருந்தும் திடீரென ஓய்வை அறிவித்துள்ளார்.

தோனிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் பெரும் ரசிகர் படையை பெற்றிருக்கும் சுரேஷ் ரெய்னா, தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அதே தினத்தில் தானும் ஓய்வை அறிவித்தார். கடந்த 2018ம் ஆண்டில் இருந்து முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் கூட விளையாடாத சுரேஷ் ரெய்னா, 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டார்.

எல்லாம் போதும்டா... அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் திடீரென ஓய்வை அறிவித்த சின்ன தல சுரேஷ் ரெய்னா !! 2

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் சுரேஷ் ரெய்னா தான் முதன்மையானவராக இருந்த போதிலும், சென்னை அணியின் நலனை கருத்தில் கொண்டு சென்னை நிர்வாகம் அவரை அணியில் இருந்து ஒட்டுமொத்தமாக புறக்கணித்தது. கடந்த வருட ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை அணி உள்பட அனைத்து அணிகளும் சுரேஷ் ரெய்னாவை புறக்கணித்தன, இதனால் ரெய்னா இனி ஐபிஎல் தொடரில் இடம்பிடிக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்பட்டது, இதனை புரிந்து கொண்ட சுரேஷ் ரெய்னாவும் இன்று திடீரென அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “நாட்டிற்காகவும், எனது மாநிலத்திற்காகவும் விளையாட கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இந்த தருணத்தில் பிசிசிஐ., சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் எனது ரசிகர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

எல்லாம் போதும்டா... அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் திடீரென ஓய்வை அறிவித்த சின்ன தல சுரேஷ் ரெய்னா !! 3

தனது ஓய்வு முடிவு குறித்து சுரேஷ் ரெய்னா அளித்த பேட்டி ஒன்றில், “இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். தென் ஆப்ரிக்கா, இலங்கையில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாட எனக்கு அழைப்புகள் வருகிறது, ஆனால் நான் எதையும் இதுவரை தீர்மானிக்கவில்லை. எனது இந்த முடிவை பிசிசிஐ.,யிடமும் தெரிவித்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.

சுரேஷ் ரெய்னா 109 முதல்தர கிரிக்கெட் போட்டிகள் விளையாடி அதில் 6871 ரன்கள் எடுத்துள்ளார், அதே போல் 336 டி.20 போட்டிகளில் விளையாடி அதில் 8654 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்காக 2005ம் ஆண்டு அறிமுகமான சுரேஷ் ரெய்னா 226 ஒருநாள் போட்டிகள், 78 டி.20 போட்டிகள் மற்றும் 18 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *