சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பொறுப்பை ஏற்கிறார் குட்டி தல சுரேஷ் ரெய்னா..! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக குட்டி தல சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படவுள்ளார்.

இந்தியாவில் வரும் 2008ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடத்தப்படும் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் டி.20 தொடர் இந்த  ஆண்டு, வரும் ஏப்ரல் மாத இறுதியில் துவங்க உள்ளது.

ஐ.பி.எல் தொடரின் துவக்கத்தில் இருந்தே மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பமானமாக திகழ்ந்த தமிழகத்தின் செல்லப்பிள்ளையான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த 2014ம் ஆண்டு சூதாட்ட புகாரில் சிக்கி சர்ச்சையை ஏற்படுத்தியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பொறுப்பை ஏற்கிறார் குட்டி தல சுரேஷ் ரெய்னா..! 2

இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது பி.சி.சி.ஐ., இரண்டு ஆண்டு தடை விதித்தது.

இரண்டு அணிகள் தடை செய்யப்பட்டதால் புனே மற்றும் குஜராத் என்ற இரண்டு புதிய அணிகள் உருவாக்கப்பட்டன. இதில் தோனி புனே அணிக்காகவும், ரெய்னா குஜராத் அணிக்காவும் விளையாடினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பொறுப்பை ஏற்கிறார் குட்டி தல சுரேஷ் ரெய்னா..! 3

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீதான இரண்டு ஆண்டு தடை காலம் முடிந்துவடைந்து விட்டதால் எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் இரு அணிகளும் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்க காத்துள்ளது. இவர்களை விட இரு அணிகளின் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள், தோனி மற்றும் சென்னை அணியின் ரீ எண்ட்ரீக்காக வெறியுடன் காத்துள்ளனர் என்றே சொல்லலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை காலம் முடிந்த தினத்தையே சமூக வலைதளங்களில் திருவிழா போல கொண்டாடிய சென்னை ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக, தோனியுடன் சேர்த்து அவரை போன்றே தமிழகத்தில் பெரும் ரசிகர் படையை பெற்றிருக்கும் சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணியில் தக்க வைத்து கொண்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பொறுப்பை ஏற்கிறார் குட்டி தல சுரேஷ் ரெய்னா..! 4

 

இந்நிலையில் சமீபத்தில் சுரேஷ் ரெய்னா இந்தியா டூடே ஊடகத்திற்கு அளித்த பிரத்யோக பேட்டி ஒன்றில், சென்னை அணிக்கு தான் திரும்புவது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்துள்ளார். மேலும் வழக்கம் போல் தோனியை இந்த தொடரிலும் சென்னை அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும், தான் சென்னை அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாகவும், எங்களுடன் சேர்ந்து ஜடேஜாவும் அணியை வழிநடத்தும் பணியில் ஈடுபடுவார் என்றும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

தல தான் தலை சிறந்த கேப்டன்;

ஐ.பி.எல் தொடரை பொறுத்தவரை தோனி தான் தலை சிறந்த கேப்டன். அவர் எங்களுடன் இருப்பதே எங்களுக்கு மிகப்பெரிய பலம். நானும் தோனியும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஒன்றாக விளையாடி வருகிறோம். அவருடன் சேர்ந்து விளையாடுவது தனி உத்வேகத்தை கொடுக்கும் என்றும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பொறுப்பை ஏற்கிறார் குட்டி தல சுரேஷ் ரெய்னா..! 5
Suresh Raina is all set to be appointed as the Vice-captain of Chennai Super Kings franchise. The India batsman himself confirmed the news,

 

தோனி,  சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜாவை தக்க வைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், வீரர்களுக்கான ஏலத்தின் மூலம் மீண்டும் அஸ்வின் மற்றும் மெக்கல்லம்மை அணியில் எடுத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பொறுப்பை ஏற்கிறார் குட்டி தல சுரேஷ் ரெய்னா..! 6

வரும் 27 மற்றும் 28ம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ள வீரர்களுக்கான ஏலத்தில், கவுதம் காம்பீரையும் சென்னை அணி தனது அணியில் இணைத்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்…

Leave a comment

Your email address will not be published.