தோனி ஓய்வு அறிவித்ததை கேட்டு சுரேஷ் ரெய்னா தேம்பிதேம்பி அழுதார் என்று அக்சர் பட்டெல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி இந்திய அணிக்காக அனைத்து விதமான தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு பல வெற்றிக்கோப்பைகளை பெற்று கொடுத்து இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு
எந்த ஒரு கேப்டனும் செய்ய முடியாத பல சாதனைகளை படைத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணி கோப்பையை பெற்றுக் கொடுத்தது மட்டுமில்லாமல் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற பல வீரர்களை உருவாக்கியும் உள்ளார்.

என்னதான் தோனி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினாலும் அடுத்து வரும் தலைமுறைக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு அறிவித்து விராட் கோலிக்கு கேப்டன் பதவியை கொடுத்தார்.
அந்த சம்பவம் தோனி ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத தருணமாக இருந்தது.
இன்னும் சில காலம் தோனி இந்திய அணியை வழிநடத்திருக்கலாம் என்று கூறுமளவிற்கு பலரும் தங்களது ஆதரவை தோனிக்கு அளித்தனர்.

கதறி அழுத ரெய்னா ….
இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரிலிருந்து தோனி ஓய்வு அறிவித்தபோது,தோனியின் உற்ற நண்பனாக கருதப்படும் சுரேஷ் ரெய்னா அழுத சம்பவத்தை இந்திய நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அக்சர் பட்டேல் பேசுகையில்,“ மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் தோனி தனது ஓய்வை அறிவித்தார், அந்த சமயம் அனைத்துமே மாறிவிட்டது அனைவரும் அமைதியாக இருந்தனர், அப்பொழுது தலைமை பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி எங்களிடம் தோனி ஓய்வு அறிவித்துவிட்டார் என்று கூறினார், இதைக் கேட்டதுமே சுரேஷ் ரெய்னா அழுதுவிட்டார், நான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன், என்னை சுற்றி அனைவரும் என்னை அழுக தொடங்கிவிட்டார்கள். நான் வேறொரு உலகத்தில் இருந்தது போல் இருந்தது, என்னை சுற்றி என்ன நடக்கிறது..? என்ன நடந்து கொண்டிருந்தது..? என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கு தோனியிடம் என்ன கூறுவது என்றும் தெரியவில்லை, அதற்கு முன் தோனியிடம் எதுவுமே பேசியது கிடையாது, அப்பொழுது தோனி என்னை ‘ பப்பு ‘ என அழைத்து, நீ வந்ததும் என்னை வெளியே அனுப்பிவிட்டாய் என்று கூறினார்,நான் என்ன செய்தேன் என்று எனக்கு தோன்றியது,உடனே நான் அழுதுவிட்டென், உடனே தோனி என்னிடம் நான் நகைச்சுவையாக தான் கூறினேன் என்று கூறி என்னை கட்டிதலுவினார், என்று அக்சர் பட்டெல் தோனி ஓய்வு அறிவித்தபோது நடைபெற்ற சம்பவம் குறித்து தெரிவித்திருந்தார்.