கோஹ்லி என் மீது வைத்திருகும் நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன்; சுரேஷ் ரெய்னா
தன் மீது நம்பிக்கை வைத்து தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி.20 தொடரில் வாய்ப்பளித்த கோஹ்லியின் நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆபிர்க்காவுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான தொடரை தீர்மானிக்கும் கடைசி டி.20 போட்டி கேப்டவுன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா, மூன்று போட்டியில் நிச்சயம் சிறப்பாக செயல்பட்டு தொடரை வெல்ல பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரெய்னா அளித்துள்ள பேட்டியில் “கடைசி போட்டியில் வெற்றி பெறுவதற்கு கேப்டன் கோஹ்லி நிறைய வியூகங்களை வகுத்துள்ளார். கடைசி இரண்டு போட்டியிலும் கோஹ்லி என்னை நம்பி எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு, என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாகவே விளையாடியுள்ளேன், அடுத்த போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்”.

மூன்றாவது போட்டி நடைபெறும் கேப்டவுன் மைதானத்தில் 150 ரன்களே வெற்றிக்கு போதுமானது என்றாலும், நாளை மைதானத்திற்கு சென்ற ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்றார்போல் வியூகங்கள் அமைத்து களமிறங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.