தோனிக்கு ரொம்ப பிடித்த வீரர் இவர் தான்; ரகசியத்தை உடைத்த யுவராஜ் சிங் !! 1

தோனிக்கு ரொம்ப பிடித்த வீரர் இவர் தான்; ரகசியத்தை உடைத்த யுவராஜ் சிங்

கடந்த 2011 இல் 50 ஓவர் உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். இந்திய அணி கோப்பை வெல்ல மிக முக்கியமான காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். சமீபத்தில் ஓய்வு பெற்ற யுவராஜ் சிங், முன்னாள் கேப்டன் தோனி யாருக்கு அதிக ஆதரவாக இருந்தார் என்பதை தெரிவித்துள்ளார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. அப்போது இந்திய அணியின் விளையாடும் லெவன் அணியை தேர்வு செய்வதில் சிக்கல் இருந்ததாகவும் யுவராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில், “இலங்கை அணிக்கு எதிரான ஃபைனலில் விளையாடும் லெவனில் ரெய்னா மற்றும் இர்பான் பதான் இடையே கடும் போட்டி நிலவியது.

அப்போது தோனி ரெய்னாவுக்கு ஆதரவாக இருந்தார். ஒவ்வொரு கேப்டன்களுக்கு ஒவ்வொரு வீரர் செல்லப்பிள்ளையாக இருப்பார்கள். அந்த வகையில் தோனிக்கு ரெய்னா என நினைக்கிறேன். அந்த நேரத்தில் ரெய்னாவுக்கு தோனி மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அதே நேரம் யூசுப் பதானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தோனிக்கு ரொம்ப பிடித்த வீரர் இவர் தான்; ரகசியத்தை உடைத்த யுவராஜ் சிங் !! 2

நானும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தேன். மேலும் பவுலிங்கிலும் விக்கெட் கைப்பற்றினேன். ரெய்னாவின் செயல்பாடு அப்போது பெரிய அளவில் இல்லை. இந்திய அணியில் அப்போது இடதுகை சுழற்பந்துவீச்சாளர் கிடையாது. அதனால் அவர்களுக்கு எனது இடத்துக்கு தேர்வு செய்ய வேறு வீரர் கிடையாது” என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தோனி இருந்தவரை ரெய்னா தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக இருந்தார். ஆனால் தோனி கடந்த 2017 இல் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதும் கோலி கேப்டனாக பொறுப்பேற்றார். அப்போது முதலே ரெய்னா சர்வதேச போட்டிகளில் அதிகமாக விளையாடவில்லை.

தோனிக்கு ரொம்ப பிடித்த வீரர் இவர் தான்; ரகசியத்தை உடைத்த யுவராஜ் சிங் !! 3

கடைசியாக ரெய்னா இந்திய அணிக்காக கடந்த 2018 இல் ஜூலை மாதம் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். அந்த ஆண்டில் ரெய்னா மொத்தமாகவே ஐந்து ஒருநாள் தொடர்களில் மட்டுமே பங்கேற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் கடைசியாக 2014/15 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரெய்னா கடைசியாக விளையாடினார். அந்த தொடரில் தான் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *