சுரேஷ் ரெய்னாவிற்கு ஆண் குழந்தை ; செம்ம ட்வீட் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் !! 1

சுரேஷ் ரெய்னாவிற்கு ஆண் குழந்தை ; செம்ம ட்வீட் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரெய்னாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. தற்போது இவர் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் முடிந்தது. இதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு கிரேசியா என பெயரிட்டனர்.

இந்நிலையில், தற்போது சுரேஷ் ரெய்னா – பிரியங்கா தம்பதியினருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சுரேஷ் ரெய்னா, “ஆச்சரியம், நம்பிக்கை, சாத்தியங்கள் மற்றும் சிறந்த உலகம் இவை அனைத்தும் தொடங்கிவிட்டன. எங்களின் மகனையும், கிரேசியாவின் தம்பியான ரியோ ரெய்னாவையும் வரவேற்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவன் எல்லைகளை கடந்து அனைவரது வாழ்விலும் அமைதி, புதுமைகளையும், வளங்களையும் கொண்டுவர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்ததையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *